சென்னை: `10 ரூபாய் முதல் ரூ.20,000 வரை’ – குப்பை கொட்டுவதற்கு கட்டணம்; விதிமுறைகளை மீறினால் அபராதம் – Vikatan

சென்னைச் செய்திகள்

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்படப் பகுதிகளில் வீடுகள், வணிக வளாகங்கள், விடுதிகள், உணவகங்கள், மருத்துவமனைகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தாற்போல் 10 ரூபாய் முதல் 20,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தற்போது, சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்களில் தனியார் நிறுவனங்களின் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது.

திட்டம் தொடக்க விழா
GCC

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 5,400 மெட்ரிக் டன் குப்பைகளும், 700 மெட்ரிக் டன் கட்டுமான மற்றும் இடிப்பு திடக்கழிவுகளும் உருவாகிறது. இதில் குடியிருப்புகளிலிருந்து 68 சதவிகிதமும், வர்த்தகரீதியான இடங்களிலிருந்து 16 சதவிகிதமும், அரங்கங்கள், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 14 சதவிகிதமும், தொழிற்சாலைகளிலிருந்து 2 சதவிகித குப்பைகள் உருவாகிறது. மருத்துவ கழிவுகள் அனைத்தும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நியமித்துள்ள ஏஜெண்டுகள் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

Source: https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-corporation-will-charge-for-the-garbage-collection-from-jan-1