சென்னையில் டிராபிக் போலீஸை பழிவாங்க.. ரோந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிய போதை டாக்டர் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில்குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக போலீசாரின் சோதனையில் பிடிபட்ட மருத்துவர் முத்து கணேஷ், காரை பறித்துக் கொண்டதால், ஆத்திரத்தில் போலீஸாரின் ரோந்து வாகனத்தை ஒட்டிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் கைது செய்தனர்.

சென்னை குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளவர். முத்து கணேஷ் வயது 31. இவர் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கீழ்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்துள்ளார்.

அங்கு வாகன சோதனைக்கு நின்றிருந்த போலீசார் அவரை பிடித்து வாகனத்தின் சாவியை பறித்துக்கொண்டார்கள். அப்போது முத்துகணேஷ் தனது வாகனத்தை தரும்படி கேட்டிருக்கிறார். தான் மருத்துவர் என்று அடையாள அட்டையைக் காட்டியிருக்கிறார். ஆனால் போலீசார் ஏற்க மறுத்ததுடன் அபராதம் விதித்தனர்.

image வங்கி கணக்கில் எஸ்எம்எஸ் முறையில் பணம் திருடும் கும்பல்.. சென்னை போலீஸ் முக்கிய அறிவிப்பு

ஈகா தியேட்டர்

இதனால் காத்திருந்து ஆத்திரம் அடைந்து ஒரு கட்டத்தில் அங்கிருந்து புறப்பட்ட மருத்துவர், அதிகாலை 3.30 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈகா தியேட்டர் சிக்னலில் திரும்பி வந்து காரைத் திருப்பித் தருமாறு போலீசாரிடம் கேட்டுள்ளார்.

வாகனம் பறிமுதல்

பணியில் இருந்த போலீசார் அவரது வாகனத்தை கொடுக்க மறுத்துவிட்டனர், போலீசார் மற்ற வாகனங்களை சோதனை செய்வதில் மும்முரமாக இருந்தனர். இந்நிலையில் தன்னுடைய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்த முத்து கணேஷ், போலீசாரின் ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

வாகனத்துடன் ஓட்டம்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், சத்தம் போட்டு வாகனத்தை நிறுத்த சொன்னார்கள். ஆனால் போதையில் இருந்த டாக்டர் முத்து கணேஷ், வானத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ பைக்கில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு பின் தொடர்ந்து சென்றார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை

முத்துவை துரத்திச் சென்று சில கிலோமீட்டர் தொலைவில் அவரை பிடித்தார். பின்னர் அவரை கீழ்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தால் ஞாயிறு அதிகாலை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-doctor-drove-away-police-patrol-vehicle-on-on-sunday-after-caught-for-drunken-driving-407238.html