சென்னையில் கரோனா: ஒரு மண்டலத்தில் குறைகிறது; மற்றொன்றில் அதிகரிக்கிறது – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் கரோனா: ஒரு மண்டலத்தில் குறைகிறது; மற்றொன்றில் அதிகரிக்கிறது

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனா தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஒரு மண்டலத்தில் குறைந்தால் மற்றொரு மண்டலத்தில் அதிகரிக்கும் போக்கு தொடர்கிறது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 2,854 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 413 கரோனா நோயாளிகள் உள்ளனர்.

இதுவரை கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட மண்டலங்களில் தொடர்ந்து அதிகமாகவே இருந்த கரோனா  நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த வாரங்களில் குறைந்த வந்த நிலையில், சென்னை ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் அடையாறு மண்டலத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக இருந்தது.

கடந்த வார இறுதியில் அடையாறு மண்டலத்தில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது மீண்டும் கோடம்பாக்கத்தில் 413 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மண்டலத்தில் கரோனா பாதிப்பு குறைந்தால் மற்றொன்றில் அதிகரிக்கும் நிலையே தொடர்ந்து நிலவுகிறது.

சென்னையில் இதுவரை கரோனா பாதித்த 2,24,386 பேரில் 2,17,539 பேர் குணமடைந்துள்ளனர். 3,993 பேர் பலியாகிவிட்டனர். 2854 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டல வாரியாக..

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/dec/28/corona-in-chennai-decreases-in-one-zone-increases-in-another-3532794.html