சென்னை: 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – ஆண் நண்பருடன் சிக்கிய பெண்! – Vikatan

சென்னைச் செய்திகள்

“தங்களுக்கு ஏற்படும் இது போன்ற பாலியல் கொடுமைகளை ஆரம்பத்திலேயே சிறுமி குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தால், இந்தப் பிரச்னை இந்த அளவுக்குப் போயிருக்காது. சிறுமியின் கர்ப்பத்தைக் கலைப்பது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுபோல அக்கம் பக்கத்தினரால் பாதிக்கப்படும் சிறுமிகள், பெண்கள், தயங்காமல் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்” எனப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
representational image

இன்னொரு சம்பவம்

சென்னை அம்பத்தூர் கொரட்டூர் பகுதியில் அரக்கோணத்தைச் சேர்ந்த ராஜி (25) என்பவர் கணவரைப் பிரிந்து 2 வயது பெண் குழந்தையுடன் குடியிருந்துவருகிறார். ராஜிக்கும் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த அஜய்குமாருக்கும் (27) பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்துவந்திருக்கின்றனர். இந்தநிலையில் ராஜியின் 2 வயது பெண் குழந்தையை அஜய்குமார் அடித்து தொந்தரவு செய்திருக்கிறார். அதோடு 20.12.2020-ல் அந்தக் குழந்தையிடம் அஜய்குமார் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜி, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் அஜய்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-kannagi-nagar-police-arrested-2-in-pocso-act