சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கோப்பு படம்

  • Share this:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் நள்ளிரவு முதலே விட்டு விட்டு பரவலாக மழை பெய்துவருகின்றது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நேற்று வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிகாலையிலேயே கனமழை பெய்து வருவதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இன்று காலை 7.15 மணி நிலவரப்படி எண்ணூர் 28 மிமி, மீனம்பாக்கம் 16மிமீ, தரமணி 27.5 மிமீ, வில்லிவாக்கம் 27.5 மிமீ, புழல் 27.5மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.


First published: January 5, 2021

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/heavy-rain-in-many-districts-including-chennai-sur-389235.html