ஆஹா.. இதுதான் நடக்க போகுதாமே.. அமித்ஷா சென்னை வரும்போது.. ஒரே கல்லில் 3 மாங்காய்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: திடீரென ஒரு தகவல் தமிழக அரசியலில் பரவி வருகிறது.. அது அமித்ஷாவின் தமிழக வருகையை குறித்து என்பதால் பரபரப்பு கூடியும் வருகிறது!

வரும் 14-ம் தேதி அமித்ஷா துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதாக தமிழகம் வர இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.. அப்படி சென்னை வரும் அமித்ஷா நிச்சயம் 3 விஷயங்கள் குறித்து பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.

ஒன்று, அதிமுக கூட்டணியில் சீட் பேரம், தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி பேசி முடிவு எடுக்கப்படும், அத்துடன் இழுபறியில் உள்ள முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, அழகிரி புது கட்சியை ஆரம்பிக்க போவதாக சொல்லி இருப்பதாகவும், அழகிரி பாஜகவின் ஆதரவாளர் என்று ஒரு பேச்சு இருப்பதாலும், நிச்சயம் அமித்ஷா அழகிரியை சந்தித்து பேசுவார் என்றும் சொல்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஜகா வாங்கிய ரஜினியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து அமித்ஷா விசாரிப்பார் என்று தெரிகிறது..

ஏற்கனவே ரஜினி உடல்நலம் பற்றி லதா ரஜினியிடம் அமித்ஷா போனில் கேட்டறிந்த நிலையில், இந்த முறை ரஜினியை நேரில் சந்திக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், அப்படி சந்திக்கும் பட்சத்தில் ரஜினியை வாய்ஸ் தரும்படி கோரிக்கை விடுக்கலாம் என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. எப்படி பார்த்தாலும் இந்த முறை அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை தரும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது விசிட்டை கேன்ஸல் செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.. இது உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை உண்மையாக இருக்கும்பட்சத்தில் விசிட்டை கேன்சல் செய்வது குழப்பத்தையும் தந்து வருகிறது.. அதேசமயம், அதிமுக – பாஜக கூட்டணி விவகாரத்தில் மோதல் என்கிற விமர்சனத்தை அதிகப்படுத்தியும் வருகிறது..!

Source: https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-bjp-seat-sharing-may-be-finalized-during-amit-shah-s-chennai-visit-sources-408062.html