கடத்தப்பட்ட அல்டாப்ரா ஆமை, மதிப்பு ₹15 லட்சம்… மெட்ராஸ் முதலைப் பண்ணையில் நடந்தது என்ன? – Vikatan

சென்னைச் செய்திகள்

நான் மூன்றரை ஆண்டுகளாக இந்தப் பண்ணையில் பணியாற்றுகிறேன். எனக்குத் தெரிந்து, இதற்கு முன்பு இந்தப் பண்ணையில் எந்தப் பிராணிகளும் கடத்தப்பட்டதில்லை. தனக்கு ஆபத்து வந்தால், இந்த ஆமைகள் எதிராளியைக் கடிக்க முற்படும். இதையும், சிசிடிவி கேமரா இல்லாத இடம், பருவத்துக்கு வந்த பெண் ஆமை போன்ற விஷயங்களை அறிந்தவர்கள்தான் ஆமையைத் திட்டமிட்டுக் கடத்தியிருக்கக்கூடும். சிலர் ஒரே நேரத்தில் பண்ணைக்குள் நுழைந்து ஆமையைத் திருடியிருக்கக்கூடும்.

இங்கு வளரும் எல்லாப் பிராணிகளையும் மிகுந்த அன்போடும் அக்கறையோடும்தான் வளர்க்கிறோம். அதனால், ஆமை காணாமல்போனதால் மிகுந்த வருத்தமடைந்தோம். சந்தேகப் பார்வையில் ஊழியர்களையும் இந்தப் பண்ணையின் வளர்ச்சியில் நட்பில் உள்ளவர்களையும் காயப்படுத்த விரும்பவில்லை. விசாரணை விஷயங்களைக் காவல்துறையினர் பொறுப்பில் விட்டுவிட்டோம். காணாமல்போன ஆமை விரைவில் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம். ஆமை வளரும் இடம் உட்பட எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொறுத்தும் பணிகளுடன், பாதுகாப்பு விஷயங்களிலும் கூடுதல் கவனம் கொடுக்கத் தொடங்கியுள்ளோம்” என்று கூறினார் ஆல்வின்.

Source: https://www.vikatan.com/news/environment/aldabra-tortoise-missing-from-madras-crocodile-bank-what-happened