செருப்பால் அடித்த மனைவி, மாமியார்… 22 பக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்னை காவலர் ஷாக் முடிவு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்
Kanyakumari

கன்னியாகுமரி: சென்னையில் இருந்து குமரிக்கு விடுமுறைக்கு வந்த காவலர் மனைவி மற்றும் உறவினர்கள் மன அழுத்தம் கொடுப்பதாக 22 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகினர்.

image

செருப்பால் அடித்த மனைவி, மாமியார்… 22 பக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்னை காவலர் ஷாக் முடிவு – வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி சிதறாமல் பின்னமூட்டுவிளை பர்னபாஸ் மகன் ஜினிகுமார் இவர் தமிழக காவல்துறை சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 தேதி குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த ஷெலின் ஷீபாவுக்கும் திருமணம் நடந்தது திருமணம்மான சிறிது நாட்களில் இவர் மாமனார் வீட்டில் விருந்திற்கு சென்றபோதே தாயாரின் சொல்கேட்டு நடந்து வந்ததால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்து உள்ளது.

மனைவி பெயரில்

இந்த நிலையில் இவர்களுக்கு ஷிஷன்சிங் (9) , ஷைஷா (6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் இவர் சென்னையில் இருந்து கடந்த ஆறாம் தேதி நட்டாலத்தில் உள்ள மனைவி பிள்ளைகளை பார்க்க சென்று உள்ளார். அப்போது மனைவி மற்றும் மைத்துனர் மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து நட்டாலம் ,வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி தாக்கியதாக தெரிகிறது.

22 பக்க கடிதம்

மனம் உடைந்த ஜினிகுமார் வீட்டில் வந்து தந்தையிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளார் இரவு தூங்க சென்ற பின் காலையில் மகனை வீட்டில் தேடிய பிறகு காணவில்லை. மகனின் அறையில் சென்று பார்த்தபோது 22 பக்க கடிதம் இருந்தது.

மனைவி சொத்து

அந்த கடிதத்தில் நிறைய குடும்ப விஷயங்களை குறிப்பிட்டுள்ள ஜினிகுமார், கடந்த 6ம் தேதி நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த 6ம் தேதி குமரி மாவட்டம் நட்டாலத்தில் உள்ள மனைவி பிள்ளைகளை பார்க்க சென்று உள்ளார் அப்போது மனைவி மற்றும் மைத்துனர் மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து நட்டாலம் ,வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி தாக்கி செருப்பால் அடித்து அவமான படுத்தினார்களாம்.

மாயமானார்

அந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ள ஜெனிக்குமார். இதன் காரணமாக வாழ்கையை முடித்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு மாயமாகி உள்ளது. அந்த கடிதத்தில் தனது சொத்துக்கு தந்தைக்கே சட்டபூர்வ உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு மாயாமாகி உள்ளார். காவலர் ஜெனிகுமாரின் தந்தை அருமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: https://tamil.oneindia.com/news/kanyakumari/chennai-cops-left-the-house-after-his-wife-and-mother-in-law-insulted-him-with-sandals-408473.html