போகியன்று டயா், பிளாஸ்டிக்களை எரிக்க வேண்டாம் – சென்னை விமான நிலையம் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை விமான நிலையம் (கோப்பு படம்)

  • Share this:
டயா்,பிளாஸ்டிக்களை எரித்து விமான போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று இந்திய விமானநிலைய ஆணயத்தின் சென்னை விமானநிலையம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்திகுறிப்பில், போகிப்பண்டிகையின்போது சென்னை விமானநிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய கழிவு பொருட்களுடன் சோ்த்து டயா், பிளாஸ்டிக்களையும் எரிப்பதால் ஏற்படும் புகை மண்டலம் விமானநிலைய ஓடுபாதையை சூழ்ந்து கொள்ளும்.இதனால் சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் போகிப்பண்டிகையன்று காலையில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் அவதியடைவது வழக்கமாக உள்ளது.

2018 ஆண்டில் போகிப்பண்டிகை புகை மண்டலத்தால் சென்னை விமான நிலையத்தில் 73 புறப்பாடு விமானங்களும்,45 வருகை விமானங்களும் பாதிக்கப்பட்டன. அவைகள் பல மணி நேரம் தாமதம், சென்னையில் தரையிறங்க முடியாமல் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்புதல், முழுவதுமாக ரத்து ஆகியவிதங்களில் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளானாா்கள்.2019,2020 ஆம் ஆண்டுகளிலும் பாதிப்பு இருந்தது.ஆனால் சற்று குறைவாக இருந்தது.

2021 ஆம் ஆண்டு போகிப்பண்டிகை அடுத்த ஓரிரு தினங்களில் வரவுள்ளது.அப்போது சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள் போகி எரிக்கும்போது டயா்கள்,பிளாஸ்டிக் போன்ற புகைகள் அதிகமாக ஏற்படக்கூடிய கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் .

மேலும் விமான நிலையத்தையொட்டியுள்ள குடியிருப்பு வாசிகள் பழைய கழிவுகளை தெருக்களில் போட்டு எரிப்பதை தவிா்க்கவும்.

அவ்வாறு செய்தால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்படைவதை தவிா்த்து,பயணிகளுக்கும் இடையூறு இல்லாமல் இருக்கும்.அதோடு சுற்றுசுழல் மாசடையாமல் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்


First published: January 11, 2021

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/please-avoid-burn-tyre-and-plastic-waste-in-bhogi-pongal-chennai-airport-request-vjr-392505.html