சென்னை: ஃபேஸ்புக்கில் பெண்கள் போட்டோ; போனில் காதல் வலை! `வழிப்பறி’ நண்பர்கள் சிக்கியது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

அதை நம்பி வருபவர்களிடம்தான் இந்தக் கும்பல் வழிப்பறி செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. பணம், பொருள்களை இழப்பவர்கள் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதில்லை. அதைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஃபேஸ்புக்கில் பழகி, இந்தக் கும்பல் பலரிடம் நகை, பணம், செல்போன்களை வழிப்பறி செய்துவந்திருக்கிறது. கைதுசெய்யப்பட்ட நான்கு பேரில் மோனீஷ் மீது கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது.

சமீபத்தில்தான் அவர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். ஐயப்பனிடமிருந்து வழிப்பறி செய்த பொருள்களை பறிமுதல் செய்திருக்கிறோம். கொரோனா பரிசோதனைக்குப்பிறகு நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

“ஐயப்பன் புகார் கொடுத்தபோது, அதை வழிப்பறி வழக்கு என்ற கோணத்தில்தான் விசாரித்தோம். விசாரணையில்தான் ஃபேஸ்புக் மூலம் நட்பாகப் பழகி, பெண்கள் குரலில் பேசி நூதன முறையில் வழிப்பறியில் இந்தக் கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், இது போன்ற ஆபத்தைச் சந்திக்க நேரிடும்’’ என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாதவரம் பகுதியில் கடந்த ஆண்டும் இதே ஸ்டைலில் வழிப்பறிச் சம்பவம் நடந்தது. அவர்கள் தொடர்பாகவும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-madhavaram-police-arrested-4-youths-over-robbery