சென்னை: நோயாளிகளுக்கு உதவுவதைப் போல நடித்து செல்போன்களைத் திருடிய அக்காள், தம்பி! -சிக்கியது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

இது குறித்து ராயப்பேட்டை போலீஸார் கூறுகையில், “மருத்துவமனையில் துப்பரவு பணியாளர்களாக தேவியும் அவரின் தம்பி மூர்த்தியும் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அன்பாகப் பழகுவார்கள். பின்னர், உதவி செய்வதுபோல நடித்து அவர்களை முழுமையாக நம்பவைப்பார்கள். பின்னர், நோயாளிகள், அவர்களுடன் வந்திருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன்களைத் திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை

திருடிய செல்போன்களை குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். செல்போன்களைப் பறிக்கொடுத்த பலர், காவல் நிலையங்களில் புகாரளிப்பதில்லை. அதனால் தேவியும் மூர்த்தியும் தொடர்ந்து செல்போன் திருடிவந்திருக்கின்றனர். டாக்டரின் விலையுயர்ந்த செல்போனை அவரின் அறைக்கு துப்பரவு செய்வதைப்போலச் சென்று திருடியபோது சிசிடிவியில் அது பதிவாகிவிட்டது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் தேவி, மூர்த்தியைக் கைதுசெய்து செல்போனைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இவர்கள் இருவரும் எத்தனை செல்போன்கள் திருடினார்கள் என்று விசாரித்துவருகிறோம்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-brother-and-sister-in-theft-case