சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் யூனியன் பிரதேசங்களாகிறதா?.. மத்திய அரசு விளக்கம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

டெல்லி: சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களை யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த மஸ்லீஸ் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி லோக்சபாவில் அண்மையில் பேசுகையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது.

இது வெறும் தொடக்கம்தான். இனி வரும் காலங்களில் சென்னை, ஹைதராபாத், மும்பை, ஆமதாபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு உள்ளது என கூறியிருந்தார்.

பொய்யான குற்றச்சாட்டு

இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறி வருகின்றன.

நகர வளர்ச்சி

லோக்சபாவில் ஒவைஸி கூறிய குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில் அளிப்பதற்கு முன்னதாகவே அவர் அவையை விட்டு வெளியேற்றிவிட்டார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது.

யூனியன் பிரதேசம்

எனவே மேற்கண்ட நகரங்களை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை. எனவே தேவையற்ற கவலை வேண்டாம். பொய்யான தகவல்களை பரப்புவதே தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கும் மஸ்லீஸ் கட்சிக்கும் வேலையாகிவிட்டது.

உண்மையாண குணம்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தெலுங்கானா மேலவை தேர்தலில் பாஜக இரு இடங்களிலும் நிச்சயம் வெல்லும். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் உண்மையான குணத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். என கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Source: https://tamil.oneindia.com/news/delhi/centre-says-no-to-chennai-to-make-union-territory-412156.html