சென்னை: நிஜத்தில் நடந்த சதுரங்கவேட்டை – புகைப்படக் கலைஞர் கடத்தலில் அம்பலமான இரிடியம் மோசடி! – Vikatan

சென்னைச் செய்திகள்

பின்னர், நியூட்டனின் மாமனாரிடம் பணம் கேட்டு மிரட்டினர். இந்தத் தகவல் எங்களுக்குத் தெரிந்ததும் நியூட்டனின் மாமனாரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு அவரைப் பின்தொடர்ந்தோம். வழக்கம்போல கடத்தல் கும்பல் பல இடங்களைக் கூறிவிட்டு இறுதியாக பட்டாபிராம் பகுதிக்கு வரச் சொல்லியது. அதன்படி நியூட்டனின் மாமனாரைப் பின்தொடர்ந்து மப்டி போலீஸார் அங்குச் சென்றனர். அப்போது அங்கு வந்த கௌதம் என்பவரைப் பிடித்தோம். அவர் அளித்த தகவலின்படி சுனிலைத் தேடினோம். அதற்காக சுனிலின் குடும்பத்தினரை எங்களின் கஸ்டடிக்கு கொண்டு வந்தோம்.

உடனடியாக திருப்பதியிலிருந்த சுனில், சென்னை வந்து எங்களிடம் சரணடைந்தார். இதற்கிடையில் நியூட்டனையும் ரகுஜியையும் காரில் கடத்திய கும்பல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சுற்றித் திரிவது எங்களுக்கு தெரியவந்தது. அந்தக் காரை மடக்கி நியூட்டன், ரகுஜியையும் மீட்டோம். நியூட்டன், தலைமறைவாக இருக்கும் மேத்யூவிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

சதுரங்கவேட்டை படத்தில் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரின் ஆசையைத் தூண்ட வேண்டும் என காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதைப்போல நியூட்டனை பெங்களூருவைச் சேர்ந்த மேத்யூ, குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசையைத் தூண்டியிருக்கிறார். மேத்யூ கூறியதைப் போல நியூட்டனும் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு சிக்கலில் சிக்கியிருக்கிறார் என்கின்றனர் போலீஸார்.

நிஜத்தில் நடந்த சதுரங்கவேட்டை சினிமா சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-photographer-kidnap-case-leads-to-iridium-scam