சென்னை:100 கிரெடிட் கார்டுகள்; 28 செல்போன்கள்! -உலக வங்கி ஆசைகாட்டிய ஆண்டனியின் அதிர்ச்சிப் பின்னணி – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்தமுறை இன்னும் அகலமான புன்னகையுடன் வரவேற்ற ஆண்டனி, வேலை தொடர்பாக இரண்டொரு வார்த்தை மட்டும் பேசிவிட்டு ரம்யாவின் உடை, அங்க அளவுகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறான். “இந்த பேங்க் வேலையெல்லாம் எதுக்கு… நீங்க மாடலிங்கே பண்லாமே” என்றும் பேசியிருக்கிறான். தைரியமான பெண்ணான ரம்யா சமாளித்துப் பேசி வெளியே வந்துவிட்டார்.

இரண்டு முறை இன்டர்வியூ நடந்தபோதும் ஆண்டனியின் அலுவலகத்தில் ஏழெட்டுப் பெண் உதவியாளர்கள், டிப்டாப் உடையில் ஆண்டனி, காவலுக்கு பவுன்சர்கள் என்றிருந்ததால் சந்தேகம்கொள்ளாத ரம்யா, இரண்டாவது சுற்று இன்டர்வியூவில் ஆண்டனி பேசிய தொனியிலும், நடந்துகொண்டவிதத்திலும் மனதுக்குள் நெருடலாக உணர்ந்தார். எனவே, அடுத்த நாள், ஆண்டனியின் எண்ணை ட்ரூகாலரில் சோதித்திருக்கிறார். அது ஒரு டிராவல்ஸின் பெயரைக் காட்டியிருக்கிறச்து. அபீஷியலாக இதை டீல் செயய முடிவு செய்து, சென்னை தரமணியிலிருக்கும் உலக வங்கிக்கு அழைத்து விசாரித்திருக்கிறார். எதுவும் இன்டர்வியூ நடக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு, நடந்தவற்றையும், ஆண்டனி அநாகரிகமாகப் பேசியவற்றையும் குறிப்பிட்டு வங்கியின் பெயரைச் சொல்லி இப்படி ஒரு மோசடி நடப்பதை வங்கி மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த வங்கியின் மேலாளர், ஆண்டனி குறித்து தரமணி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாலை ராம் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து, கடந்த வாரத்தில் அவனைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

இது குறித்து காவல்துறை உயரதிகாரியிடம் பேசினோம். “ஆண்டனியின் செல்போன் நம்பரைக்கொண்டு சைபர் க்ரைம் போலீஸார் அவன் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். சொந்த ஊர் திருச்சி. சென்னையிலுள்ள கல்லூரியில் பி.எஸ்சி படித்திருக்கிறான். 39 வயதாகும் ஆண்டனிக்கு திருமணமாகவில்லை. ஆன்லைனில் வேலைக்காக விண்ணப்பிப்பவர்களில் பெண்களின் விவரங்களை ஹேக் செய்து சேகரித்து, பிறகு அவர்களுக்கு போன் செய்து, இன்டர்வியூ கார்டை அனுப்பி தி.நகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைப்பான். பின்னர் அந்தப் பெண்களிடம் அன்பாகப் பேசி காதல்வலை விரிப்பான். அவனை முழுமையாக நம்பும் பெண்களிடமிருந்து பேசிப் பேசி பணத்தைக் கறந்துவிட்டு தலைமறைவாகிவிடுவான்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-in-cheating-case-3