சென்னை: லோன் தருவதாக போலி கால் சென்டர் நடத்தி மோசடி – ஆண் நண்பருடன் சிக்கிய பெண்! – Vikatan

சென்னைச் செய்திகள்

இதையடுத்து போலீஸார் அந்தக் கால் சென்டருக்கு சென்றனர். அங்கு நங்கநல்லூரைச் சேர்ந்த சண்முகபிரியா (24), அவரின் ஆண் நண்பரான செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத் (30) ஆகியோர் போலி கால் சென்டரை நடத்திவந்தது தெரியவந்திருக்கிறது. அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, வங்கியிலிருந்து லோன் வாங்கித் தருவதாகக் கூறி சிலரை இவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு பைக்குகள், நான்கு செல்போன்கள், 4,800 ரூபாய், விசிட்டிங் கார்டுகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் சண்முகபிரியாவையும் பிரேம்நாத்தையும் வேளச்சேரி காவல் நிலையத்தில், துணை ஆணையரின் ஸ்பெஷல் டீம் போலீஸார் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், போலி கால் சென்டரை நடத்திய சண்முகபிரியாவும் பிரேம்நாத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

போலி கால் சென்டர்
representational image

இது குறித்து போலீஸார் கூறுகையில், “கைதான இருவரும் ஒரே கால் சென்டரில் வேலை பார்த்துவந்திருகின்றனர்.பிறகு இருவரும் சேர்ந்து போலி கால் சென்டர்களைத் தொடங்கி இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். லோன் கேட்டு ஆன் லைனில் விண்ணப்பிப்பவர்களின் விவரங்களைச் சேகரித்த இருவரும் குறைந்த வட்டியில், வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிவந்தது தெரியவந்தது. மோசடி செய்த பணத்தைக் கொண்டு பிரேம்நாத், செவ்வாப்பேட்டையில் மளிகைக்கடை நடத்திவந்திருக்கிறார். கடந்த ஓராண்டாக இந்த போலி கால் சென்டர் செயல்பட்டுவந்திருக்கிறது. இவர்கள் இருவரும் எத்தனை பேரை ஏமாற்றினார்கள் என்று விசாரித்துவருகிறோம்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-fake-call-centre-team