சென்னை, கோவையை விடுங்க.. மதுரையிலும் வளர்கிறது மக்கள் நீதி மய்யம்.. தந்தி டிவி சர்வே – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நகர்ப்புறங்களில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்கு சதவீதம் அதிகமாக இருப்பது தந்தி டிவி கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது.

image

தவிர்க்க முடியாத சக்தியாக மாறும் நாம் தமிழர்.. கருத்து கணிப்பு முடிவுகள் என்ன சொல்லுகின்றன?

சென்னை, கோவை, மதுரை என நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான தொகுதிகளில் 3வது இடம் பிடித்துள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலிலும் நகர்ப்புற பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி நல்ல வாக்குகளை பெற்றிருந்தது.

சென்னை, கோவை

கோவையில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவர் மகேந்திரன் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றார். சென்னை தெற்கு, தொகுதியிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது அந்த கட்சி. அதே டிரண்ட் இப்போதும் தொடர்கிறது. இன்னும் சொல்லப்போனால் மேலும் சில நகர்ப்புற பகுதிகளிலும் கமல்ஹாசன் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து உள்ளது என்பதே தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு சாராம்சமாக இருக்கிறது.

தாம்பரம், பூந்தமல்லி

உதாரணத்துக்கு, தாம்பரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 6 முதல் 12 சதவீதம் வரை வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று தந்தி டிவி தெரிவிக்கிறது. பூந்தமல்லி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 2 முதல் 5 சதவீதம் வாக்குகளை பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் என்றும் நாம் தமிழர் கட்சியும் இதை அளவுக்கு வாக்குகளை பிடிக்கும் என்றும் தந்திடிவி தெரிவிக்கிறது.

சென்னை தொகுதிகள்

தாம்பரம் போலவே, மற்றொரு தென் சென்னை பகுதியில் உள்ள ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 8 முதல் 14 சதவீதம் வரை வாக்குகளை பெறக்கூடும் என்று தந்தி டிவி தெரிவிக்கிறது. இங்கு மூன்றாவது இடம் பிடிக்கிறது அந்த கட்சி. தி நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 8 முதல் 14 சதவீதம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். சைதாப்பேட்டை தொகுதியில் 6 முதல் 12 சதவீதம் வாக்குகள், அண்ணாநகர் தொகுதியில் 8 முதல் 14 சதவீதம் வாக்குகள். திருவிக நகர் தொகுதியில் 5 முதல் 8 சதவீதம் ஓட்டுகள், வில்லிவாக்கம் தொகுதியில் 5 முதல் 8 சதவீதம் ஓட்டுகள் , பெரம்பூர் தொகுதியில் 5 முதல் 8 சதவீதம் ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்று 3வது இடம் பிடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

மதுரை ம.நீ.ம நிலவரம்

சென்னையை தாண்டி, மதுரை நகரிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நல்ல வாக்கு சதவீதம் வந்துள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் 5 முதல் 11 சதவீதம் வாக்குகளை அந்தக் கட்சி பெறும் என்று கணித்துள்ளது தந்தி டிவி. மதுரை வடக்கு தொகுதியில் 6 முதல் 9 சதவீதம் ஓட்டுக்கள், மதுரை மத்திய தொகுதியில் 5 முதல் 8 சதவீதம் வாக்குகளை பெறும் மக்கள் நீதி மய்யம் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு. அந்த தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாவது இடத்தை பிடிக்கிறது.

நகரங்களில் வளரும் ம.நீ.ம

இந்த கணிப்புகளை வைத்து பார்த்தால், சென்னை, கோவை மட்டுமில்லாமல், கமல்ஹாசனுக்கு பரவலாக நகர்ப்புற மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது உறுதியாக தெரிகிறது. அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு செல்லக் கூடியவர்கள், அதிகம் படித்தவர்கள் கணிசமாக நகரங்களில் உள்ளனர். நடுத்தட்டு மற்றும் மேல் நடுத்தட்டு மக்களிடையேயும் ஆதரவு அதிகரித்திருப்பதை இந்த கருத்துக் கணிப்பு பிரதிபலிக்கிறது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-s-makkal-needhi-maiam-will-get-more-vote-share-in-cities-including-chennai-416411.html