டாஸ்மாக் மதுபான கடைகள் 4 நாட்கள் மூட வேண்டும் – சென்னை கலெக்டர் உத்தரவு – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சட்டசபை தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள் 4 நாட்கள் மூட வேண்டும் என சென்னை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. எனவே தமிழ்நாடு மதுபானம் விதிகள் படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் மற்றும் உரிமங்கள் கொண்ட பார்கள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலும், மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2-ந்தேதி அன்றும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறும்பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/state/2021/03/31093826/2493048/Tamil-news-Tasmac-stores-to-close-for-4-days-Chennai.vpf