வேகமாக பரவும் கொரோனா… என்ன செய்யப் போகிறது சென்னை மாநகராட்சி? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.
  • நேற்று ஒரே நாளில் மட்டும் 4,000 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • சென்னையில் மட்டும் 1,500 பேருக்கு கொரோனா கன்ஃபார்ம்.

தமிழகதத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் சுமார் 4,000 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் சென்னையில் மட்டும் 1,500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கப்பட உள்ளது.

சென்னை: சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 1,500 ஐ நெருங்கியுள்ள நிலையில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மோடிக்கு கொரோனா தடுப்பூசி போட்ட புதுச்சேரி செவிலியர்!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வீடு வீடாக இன்று முதல் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக 16000 களப்பணியாளர்கள், தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 100 மருத்துவர்கள், 4,000 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-corporation-take-steps-up-measures-to-reduce-corona-spread-in-city/articleshow/81963763.cms