சென்னை மக்கள் சுவாசத்திலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்… அதிர்ச்சி ஆய்வறிக்கை… உண்மை என்ன? – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்துப் பேசிய நுரையீரல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன், “இதுவும் காற்று மாசுபாட்டின் ஒரு பகுதிதான். இதனால், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். ஆஸ்துமா நோயாளிகள் இந்தச் சூழலில் நீண்டகாலத்துக்கு இதே காற்றைச் சுவாசித்துக்கொண்டிருந்தால், மூச்சுத்திணறல் பிரச்னை அதிகரிப்பதோடு, காலப்போக்கில் COPD பாதிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் இது தூண்டுதலாக அமையும். இந்த மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் மட்டுமன்றி, சுவாச உறுப்புகளான மூக்கு, தொண்டை போன்றவை பாதிக்கப்படும். இதுபோக, வயிறு, குடல் பகுதிகளும் பாதிக்கப்படும். இவற்றைவிட முக்கியமாக பிளாஸ்டிக் மனித உடலுக்குள் செல்லும்போது, புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் அதிகரிக்கும். இவையனைத்துமே, மனிதத் தூண்டுதலால் அதிகரிக்கும் சூழலியல் நோய்கள். நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட நோய்கள்” என்று கூறினார்.

பிளாஸ்டிக்

ஏற்கெனவே, தமிழகத்தில் ஒற்றைப் பயன்பாட்டுப் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது கண்கூடு. நாளுக்கு நாள் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இருப்பினும், இதன் தீவிரத்தை உணர்ந்து அரசுகள் நெகிழிப் பொருள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதிலும் அதை அமல்படுத்துவதிலும் காட்டும் அலட்சியம், மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் சிக்கல்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளை உணர்ந்து விரைந்து செயல்பட்டே ஆக வேண்டிய நிலையில் இன்று நின்று கொண்டிருக்கிறோம். இதற்கு மேலும் நெகிழியின் மீதான அலட்சியப் போக்கு தொடர்ந்தால், மோசமான எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும்.

Source: https://www.vikatan.com/social-affairs/environment/chennai-people-may-inhale-microplastics-from-the-air-found-new-study