பறக்கும் டாக்ஸி; ஐ.ஐ.டி. மெட்ராஸின் புதிய படைப்பு – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

தற்போது இருக்கும் டாக்ஸி கட்டணத்தைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அல்லது இரண்டு மடங்கு கூடுதலாக இருக்கும்

Flying Taxis from IIT Madras all you need is smartphone to book the plane : சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போவதற்கு நமக்கு ஆயுளே குறைந்து போய்விடும் போல இருக்கிறது. நாம் நினைத்த இடத்தை நினைத்த நேரத்தில் அடைய வேண்டும் என்பதெல்லாம் மெட்ரோ வாழ்க்கையில் கனவு தான்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் ஐ.ஐ.டி. மெட்ராஸ் வேற லெவல் ஐடியாவுடன் களத்தில் இறங்கியுள்ளது. இந்த ஐடியா நடைமுறைக்கு வரும் போது நிச்சயமாக நீங்கள் உங்கள் மொட்டை மாடியில் இருந்து ஃப்ளைட்டில் சென்று உங்கள் இலக்கை அடையலாம்.

இது ஏதோ சயின்ஸ் ஃபிக்சன் என்று நினைத்துவிட வேண்டாம். 10 மடங்கு கூடுதல் வேகத்துடன், இயற்கைக்கு ஏற்ற வகையில், குறைந்த விலையில் நிச்சயமாக உங்களை இலக்கை அடைந்துவிடலாம் என்பதை உறுதி செய்கிறது ஐ.ஐ.டி. மெட்ராஸ்.

பேட்டரியால் இயங்கும் இந்த மினி விமானம் ஒரு 200 கிலோ எடையை தாங்கும். கிட்டத்தட்ட 2 நபர்களை அழைத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. முதல் முயற்சியாக டாக்ஸி 50 கிலோ எடையில் உருவாக்கபப்ட்டு உள்ளது. இதன் சோதனைகள் ஜூலை 2021-ல் நடத்தப்பட்டு உண்மையான விமான பயன்பாடு 2022ம் ஆண்டு நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஐ.டி.யுடன் இணைந்து பணியாற்றும் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் சத்யா சக்ரவர்த்தி லித்தியம் – ஐயன் பேட்டரிகள் இதில் பயன்படுத்தப்படும் என்றும், 0.5 கி.மீ முதல் 2 கி.மீ உயரத்தில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் இது பயணிக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 10 முதல் 20 ட்ரிப்கள் பயணிக்கலாம்.

தற்போது இருக்கும் டாக்ஸி கட்டணத்தைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அல்லது இரண்டு மடங்கு கூடுதலாக இருக்கும் என்றும் தேவை அதிகரிக்கும் போது அதன் கட்டணம் குறைய துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதில் தொழில்நுட்ப ரீதியிலான சவால்கள் நிறைந்துள்ளது. நீங்கள் மிகவும் குறைவான வேகத்தில் செல்ல வேண்டும் என்றால் இறக்கைகள் கொஞ்சம் பெரிதாக இருக்க வேண்டும். இறக்கைகளை சுற்றி இருக்கும் காற்றின் அழுத்தம் தான் எடையை தாங்கும் அளவிற்கு மாற்றுகிறது. ஆனால் இப்போது குறைந்த வேகத்தில் சிறிய அளவிலான இறக்கைகள் கொண்ட விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆராய்ச்சி மற்றும் காப்புரிமை நடைமுறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே பறக்கும் டாக்ஸிகள் மிகவிரைவில் நாம் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக மாறிவிட உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/technology/flying-taxis-from-iit-madras-all-you-need-is-smartphone-to-book-the-plane-291803/