மெட்ராஸ் வரலாறு: விஜய் நடித்த `திருமலை’, `மதுர’ படம் எடுக்கப்பட்ட ஸ்டூடியோக்களின் கதை | பகுதி 8 – விகடன்

சென்னைச் செய்திகள்

இப்போது கல்யாண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவும், மருத்துவமனையாகவும் பலருக்குத் தெரிந்திருக்கும். வடபழனி பேருந்து நிலையம் தொடங்கி, 100 அடி சாலை வரை வியாபித்திருந்தது அந்த ஸ்டூடியோ.

விஜய வாஹினி ஸ்டூடியோ

எம்.ஜி.ஆர் நடித்த `எங்க வீட்டுப் பிள்ளை’ முதல் ரஜினி நடித்த ‘பாட்ஷா’, ‘உழைப்பாளி’ வரை அங்கே உருவானவைதான். பாட்ஷாவுக்காக அங்கே செயற்கையாக ஒரு காலனியை உருவாக்கியிருந்தனர். (மாணிக்கம்) ரஜினியின் ஆட்டோ ஸ்டாண்டு, வீடு எல்லாம் அங்கே அமைக்கப்பட்டிருந்தன. ரஜினியை தூர இருந்து பார்க்கலாம். மற்றபடி சுரேஷ் கிருஷ்ணா, யுவராணி, ஆன்ந்த்ராஜ் போன்றவர்களிடம் பேச முடியும். ஓராயிரம் சினிமாக்களை உருவாக்கிய அந்த இடம் இன்று கடித்துக் குதறப்பட்ட கந்தல் ஆடைபோல மாறிவிட்டது.

கமல்ஹாசன் நடித்த ‘நம்மவர்’, ‘மகளிர் மட்டும்’ படங்களின் படப்பிடிப்புகள் அங்கே நடந்தன. அதனுள்ளே நாகிரெட்டியாரின் பிரமாண்டமான பங்களா ஒன்று இருக்கும். உழைப்பாளி படப்பிடிப்பின்போது ஓரிரு முறை அவரைப் பார்த்திருக்கிறேன்.

இன்றும் நவநாகரிகமாகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டே இருக்கிறது. எல்.வி. பிரசாத் அவர்களால் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம். ஷங்கர், மணிரத்னம் போன்றவர்களுக்கு மிகவும் பிடித்தமான செட்டும்கூட. தம் படத்துக்கான ஏதாவது ஒரு பாடலை அங்கு எடுக்கிறார்கள். `மாயாபஜார்’ போன்ற படங்கள் ஆப்டிகல் எஃபெக்டுக்காக அங்கே எடுக்கப்பட்டன.

பிரசாத் ஸ்டூடியோ

பிரசாத் ஸ்டூடியோ

இப்போதும் அங்கே ‘கல்யாண சமையல் சாதம்… காய்கறிகளும் பிரமாதம்…’ என ரங்காராவ் பாடும்போது தட்டுத் தட்டாக லட்டும் சாப்பாடும் நகர்ந்து செல்லும் காட்சியை எடுத்த அந்த ஆப்டிகல் கேமரா கேட்பாரற்றுக் கிடக்கிறது. அதை ஆபரேட் செய்யத் தெரிந்த ஒரே ஒரு நபர் இப்போதும் அங்கே இருக்கிறார். அவர் பெயர் அன்வர் என நினைவு. இந்த 3டி கிராபிக்ஸ் காலத்தில், முடிந்துபோன ஒரு காலத்தின் தடயமாக அவரும் அந்த எந்திரமும் அங்கே.

Source: https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/story-speaks-about-chennai-old-studios