மாஸ்க் அணியாதவர்களை அனுமதித்தால் கடைகளுக்கு சீல்? – சென்னை மாநகராட்சி ஆணையர் சூசக பேட்டி! – Kalaignar Seithigal

சென்னைச் செய்திகள்

கடந்த ஆண்டு இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சுமார் 4 லட்சம் பேர் பயன் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். VIDMED இன்று காணொளி மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடியோ மூலமாகவும் தொடர்பு கொண்டு பேசலாம். மருந்து தேவை படுபவர்கள், கிருமி நாசினி கொண்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் போன்ற ஆலோசனை வழங்கப்படும்.

மனச்சோர்வு ஏற்பட்டவர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கான விஷயங்களை பகிர்ந்து கொண்டு நிவாரணம் பெறலாம். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எப்ஐஆர் பதிந்து சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு கிரிமினல் குற்றம் என்று தெரிவித்தார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசிய உரையாடல் அவதூறு பரப்புவதாக அவர் மீது தகுந்த சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் பிரகாஷ் கூறினார். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சென்னையில் இருபத்தி ஒரு லட்சம் பேர் இந்த வயதினர் இருப்பதாகவும் தற்போது வரை 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டதாகவும் ஜூலை மாதத்திற்குள் மீதம் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் பிறகு சென்னை பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடும் என்று பிரகாஷ் தெரிவித்தார்.

மக்கள் கூடும் இடங்கள் திறந்தவெளி மைதானங்களில் மால், கடைத் தெருக்கள் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் திருமண விழாக்களுக்கு இன்னும் குறைந்த நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சென்னையில் 204 திறந்த மைதானங்கள் இருப்பதாகவும் அங்கே மக்கள் கூட அனுமதி குறித்து நாளை முழுமையான தகவல் வெளியிடப்படும் என்றார்.

முகக் கவசம் அணியாமல் கடைகளுக்கு வருபவர்கள் அனுமதித்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றார். சென்னையில் உள்ள பாதிக்கப்பட்ட இடங்கள் 475 தெருக்கள் 3 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாகவும் 6 நபர்களுக்கு மேல் உள்ளவர்கள் 363 தெருக்கள் 10 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு இருக்கும் தெருக்கள் 108 முற்றிலும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Source: https://www.kalaignarseithigal.com/corona-virus/2021/04/18/chennai-corporation-commissioner-says-that-restrictions-will-be-intensified-in-the-city