கொரோனா தடுப்பூசி.. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- சென்னை ஹைகோர்ட் உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று, பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசிடம் தலைமை நீதிபதிகள் அமர்வு விளக்கம் கேட்டிருந்தது.

இன்று தமிழக அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் மத்திய அரசிடம் தாங்கள் முன்னுரிமை தருவது தொடர்பாக விளக்கம் கேட்டதாகவும் அதற்கு மாற்று திறனாளிகளுக்கு தனி முன்னுரிமை தரவில்லை என்று மத்திய அரசு குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், சிறப்பு கவுண்டர் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று அரசு கூறியது.

இதையடுத்து, மாற்று திறனாளிகளுக்கு தடுப்பூசி போடும் வயது வரம்பை மாற்றியமைக்க முடியுமா என்று பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மேலும் சிறப்பு கவுண்டர் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், தடுப்பூசி போடும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

imageஊரடங்கு அச்சத்தால் வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள் – சென்னை, கோவை ரயில் நிலையங்களில் குவிந்தனர்

இதுகுறித்து டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த தீபக் என்பவர், கூறுகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே நோய் பாதிப்புக்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-says-separate-counters-should-be-open-for-inject-coronavirus-vaccine-for-differen-418252.html