கொரோனா இரண்டாம் அலை; சென்னை அரசு மருத்துவமனைகளின் நிலை என்ன? – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

முன்னதாக 60% பேருக்கு நோய் தொற்று அறிகுறிகள் இல்லாமலும், 40% பேருக்கு நோய் தொற்று அறிகுறிகளும் இருந்தன. ஆனால் தற்போது அதிக அளவில் நோய் தொற்று அறிகுறிகள் இருக்கும் நபர்களே மருத்துவமனைக்கு வருகின்றனர்

Coronavirus second wave Chennai : சென்னையில் உள்ள ஐந்து பெரிய மருத்துவமனைகளில் மொத்தமாக 4368 படுக்கைகள் உள்ளன. ஏப்ரல் 18ம் தேதியின் போது 3,002 படுக்கைகள் நிரம்பியுள்ளது. கிண்டியில் செயல்பட்டு வரும் அரசு கொரோனா மருத்துவமனையின் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளது. டிஸ்சார்ஜ் எண்ணிக்கையை பொறுத்து புதிதாக காத்திருக்கும் நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இது குறித்து தி இந்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு ஒன்றில், எங்களின் அனுமதிகள் டிஸ்சார்ஜ் ஆகும் நபர்களின் எண்ணிக்கையை கொண்டே அமைந்துள்ளது. என்.டி.எஸ்.ஐ. வளாகத்தில் கொரோனா சிகிச்சை வளாகம் வைத்துள்ளோம். அளவான அறிகுறிகள், அறிகுறிகள் அற்ற நோயாளிகள் மற்றும் இணை நோய் இல்லாமல் இருக்கும் இளம் நோயாளிகளை சோதனைக்கு பிறகு சி.சி.சி.க்கு அனுப்புகிறோம் என்று கொரோனா மருத்துவமனையின் இயக்குநர் கே. நாராயண சாமி குறியதை குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க : கொரோனா இரண்டாம் அலை எப்படி வித்தியாசமானது?

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 250 புதிய படுக்கைகள் இணைக்கப்பட உள்ளது. முன்னதாக 60% பேருக்கு நோய் தொற்று அறிகுறிகள் இல்லாமலும், 40% பேருக்கு நோய் தொற்று அறிகுறிகளும் இருந்தன. ஆனால் தற்போது அதிக அளவில் நோய் தொற்று அறிகுறிகள் இருக்கும் நபர்களே மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களில் நிறைய பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. எனவே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆக்ஸிஜன் அளவு

நாள் ஒன்றுக்கு நான்கு மருத்துவர் குழு நோயாளிகளை முழு நேரமும் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு நோய் அறிகுறிகளில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா அல்லது ஆக்ஸிஜன் செறிவு நிலை என்ன என்பதை அவர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு எட்டு முறை ஆக்ஸிஜன் செறிவு குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நோய் தொற்று ஏற்பட்டு 5 – 9 நாட்கள் மிகவும் முக்கியமானது

நோய் தொற்று ஏற்பட்டு, சுவாச பிரச்சனையால் ஒருவர் மருத்துவமனைக்கு வருகின்ற பட்சத்தில் நோய் தொற்று அதிகரிக்கும் போது நான்கு அல்லது ஐந்தாவது நாளில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. ஐந்தாவது முதல் 9வது நாள் வரை நோயின் தன்மை அதிகரிக்கிறது. முதல் நாளிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு இத்தகைய தாக்கம் ஏற்படுவதில்லை.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இரண்டு புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. ஒன்று பாஸிட்டிவ் நோயாளிகளுக்கு மற்றொன்று சந்தேகத்திற்குரிய அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கானது. வரும் நாட்களில் அதிக படுக்கை வசதிகளும், அதிக மருத்துவ பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் மாநிலங்கள்; மத்திய அரசுக்கு “எமெர்ஜென்சி” சிக்னல் அனுப்பிய டெல்லி

ஞாயிற்றுக்கிழமை அன்று 25000 நபர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், மருத்துவமனைகள் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-second-wave-chennai-government-hospitals-monitor-beds-and-oxygen-293747/