சென்னை: திருமண இணையதளம் மூலம் வந்த வரன்! – ஆசிரியையை ஏமாற்றிய 3 குழந்தைகளின் தந்தை – Vikatan

சென்னைச் செய்திகள்

பின்னர் இருவீட்டினர் சம்மதத்துடன் 22.3.2020-ல் நிச்சதார்த்தம் செய்ய முடிவு எடுத்தோம். அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தோம். அதன்பிறகு 8.5.2020-ல் தாம்பூலம் மாற்றிக் கொண்டோம். 30.8.2020-ல் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஊரடங்கு காரணமாக திருமணத்தை விருகம்பாக்கத்திலேயே நடத்தினோம். திருமணத்துக்குப்பிறகு மறுவீட்டு அழைப்பும் நடந்தது. அதன்பிறகு நான் என்னுடைய கணவருடன் வாழ்ந்து வந்தேன். என்னுடைய கணவர் இன்டீரியர் டிசைனர் வேலை செய்து வருகிறார். 9.9.2020-ல் காலை 9 மணியளவில் வேலைக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. ஒருவாரத்துக்குப்பிறகு எனக்கு சந்தேகம் வந்ததால் அவரை நான் போனில் திட்டினேன். அப்போதுதான் அவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்த தகவல் எனக்கு தெரியவந்தது. மேலும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரிந்தது. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன்.

முதல் தகவல் அறிக்கை

இதையடுத்து என்னுடைய கணவரிடம் போனில் பேசியபோது என்னைக் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார். என் மாமியார், மாமனார் நாத்தனார் ஆகியோரிடம் நியாயம் கேட்டபோது, `உன்னை நாங்கள் வைத்து காப்பாற்றுகிறோம் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது’ என்று அவர்கள் மிரட்டினர். திருமணத்தின்போது எனக்கு வரதட்சணையாக கொடுத்த 10 சவரன் தங்க நகைகளை என் மாமியார், மாமனார் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். சீர்வரிசை பொருள்கள், கையில் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் ஆகியவை மாப்பிள்ளை குடும்பத்தாரிடம் உள்ளது. எனவே என்னை ஏமாற்றியதோடு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து எனது வாழ்க்கையை கேள்விகுறியாக்கிய லோகநாதரவிகுமார் மற்றும் மாமியார் மங்கையர்கரசி, மாமானார் அழகப்பன். நாத்தனார் மஞ்சு மீனா. உறவினர்கள் மணிகண்டன், அவரின் மனைவி அபிநயா, மஞ்சு மீனாவின் கணவர் சரவணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொன்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா, 498 (A), 406, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-teacher-complaint-against-her-husband