நீங்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவரா.. அவசியம் இதை தெரிந்து கொள்ளுங்கள்.. – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (25-4-2021) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில்களில் அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. 

மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில்களில் கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி அறிவிப்புகள் அவ்வப்போது மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் அறிவிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம், கடந்த 24 -2021 முதல் மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை 25-4-2021 காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் சேவைகள் விவரம்:

1. விம்கோ நகர் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (நீல வழித்தடம்) 1 மணி நேர இடைவெளி

2.புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை( அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் கோயம்பேடு மெட்ரோ வழியாக) ( பச்சை வழித்தடம்)  இரண்டு மணிநேர இடைவெளி

3. புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை( அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் கோயம்பேடு மெட்ரோ வழியாக)  இரண்டு மணிநேர இடைவெளி.நாள் முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச மணி நேரம்இல்லாமல் இயக்கப்படும். 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருப்பதுடன், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பயணம் செய்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

Last Updated Apr 24, 2021, 11:07 AM IST

Source: https://tamil.asianetnews.com/politics/are-you-traveling-on-chennai-metro-train-must-know-this–qs1zmw