சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிச்சாலும் எவ்ளோ நல்ல விஷயம் நடந்திருக்கு பாருங்க! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 4206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4271 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அதாவது மருத்துவமனைக்கு வந்தவர்களை போல் 100 சதவீதம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு தற்போது பல்கி பெருகி வருகிறது.

இந்த நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 4206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

imageதமிழகத்தில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. 11 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!

சென்னை

இன்று ஒரே நாளில் 4271 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். சென்னை இன்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதன் மூலம் சென்னையில் 4,567 பேர் இதுவரை பலியாகிவிட்டனர். இதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் பலியாகிவிட்டனர்.

ஈரோடு

அரியலூரில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கும் செங்கல்பட்டில் 1028 பேருக்கும் சென்னையில் 4206 பேருக்கும் கோவையில் 1038 பேருக்கும் கடலூரில் 218 பேருக்கும் தருமபுரியில் 106 பேருக்கும், திண்டுக்கல்லில் 228 பேருக்கும் ஈரோட்டில் 313 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

காஞ்சிபுரத்தில் 558 பேருக்கும் கன்னியாகுமரியில் 301 பேருக்கும் திருவள்ளூரில் 885 பேருக்கும் திருவண்ணாமலையில் 370 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இதுவரை அரியலூரில் 5357 பேருக்கும் செங்கல்பட்டில் 73861 பேருக்கும் கோவையில் 73219 பேருக்கும் சென்னையில் 309899 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

60 வயது

12 வயதுக்குட்பட்டவர்களில் 19315 ஆண்களுக்கும் 19928 பெண்களுக்கும் என 39243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 முதல் 60 வயதுடையோரில் 539108 ஆண்களும் 353041 பெண்களும் 60 வயதை கடந்தோரில் 94744 ஆண்களுக்கும் 55814 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/4206-cases-were-found-positive-in-chennai-today-418820.html