சென்னை பகுதியில் ஒரு தொகுதியையும் அதிமுகவுக்கு விட்டுத் தராத திமுக.. சி வோட்டர் கணிப்பு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மண்டலத்தில் உள்ள 37 சட்டசபை தொகுதியையும் திமுகவே மொத்தமாக அள்ளும் என இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடக்கு, தெற்கு, கொங்கு, காவிரி டெல்டா, சென்னை ஆகிய பகுதிகள் உள்ளன. இவை சட்டசபை தொகுதிகளை பிரித்து மண்டலங்களாகவோ பகுதிகளாகவோ கொண்டு வர ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் சென்னை பகுதியில் 37 தொகுதிகள் உள்ளன. இதில் சில தொகுதிகள் அதிமுக, திமுகவின் கோட்டை என சொல்லப்படுகிறது. உதாரணமாக ராயபுரம் அதிமுகவின் கோட்டை என்கிறார்கள். அது போல் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுகவின் கோட்டை என்கிறார்கள்.

imageதமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு

முடிவுகள் எப்போது

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவியது. இந்த நிலையில் மே 2 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மண்டலம்

அதில் இந்தியா டுடே- சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. வடக்கு, தெற்கு, மேற்கு, காவிரி டெல்டா ஆகிய பகுதிகளில் திமுகவே அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் சென்னை மண்டலத்தையும் திமுகவே வசப்படுத்திக் கொள்ளுமாம்.

கட்சி

சென்னையில் மொத்தம் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெல்லும். அதாவது 37/37 , ஃபுல் மார்க் எடுத்துவிடும் என்கிறார்கள். சென்னையில் மற்ற எந்த கட்சியும் வெல்லாது என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவின் வாக்கு சதவீதம்

அது போல் வாக்கு சதவீதம் என பார்த்தால் திமுக கூட்டணி 58 சதவீதமும் அதிமுக கூட்டணி 26 சதவீதமும் பெறும். அமமுக ஒரு சதவீத வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் 5 சதவீதம் வாக்குகளையும் மற்ற கட்சிகள் 10 சதவீத வாக்குகளையும் பெறும் என்கிறார்கள்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/india-today-c-voter-exit-poll-2021-says-that-dmk-will-sweep-the-chennai-region-s-37-constituencies-419283.html