சென்னை: அம்மா உணவகத்தை சூறையாடிய தி.மு.கவினர்! – அ.தி.மு.கவினர் சாலை மறியல் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதற்கிடையில் தி.மு.கவினரின் செயலைக் கண்டித்து அ.தி.மு.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அ.தி.மு.கவினர் சாலை மறியலைக் கைவிட்டனர். அதன்பிறகு மீண்டும் உணவகத்தில் அம்மா உணவகம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் தி.மு.கவினர் அம்மா உணவகத்தை சூறையாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.

சாலை மறியல்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “அம்மா உணவகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இதுவரை புகார் வரவில்லை. விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவத்தால் அம்மா உணவகத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், “ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே தி.மு.கவினர் அராஜகத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். ஏழை எளிய மக்களுக்காக ஜெயலலிதா, அம்மா உணவகத்தை தொடங்கினார். இந்தத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்துவருகிறது. ஏராளமானவர்கள் பயனடைந்து வருகின்றனர். மக்கள் சாப்பிடுகிற இந்த இடத்தில் தி.மு.கவினர் அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அம்மா உணவகத்தில் உள்ள பொருள்கள், உணவை சேதப்படுத்தியிருக்கின்றனர். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றனர்.

இதனிடையே அப்பகுதி திமுக நிர்வாகிகள் தலைமையில் கிழிக்கப்பட்ட பேனர்கள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இரு திமுக உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“தவறு செய்த இருவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் ஸ்டாலின் உத்தரவுவிட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து அப்பகுதி தி.மு.க தரப்பை தொடர்பு கொண்ட போது அவர்கள் பதிலளிக்கவில்லை.

Source: https://www.vikatan.com/news/crime/amma-canteen-was-demolished-by-dmk-cadres-in-chennai