‘வட சென்னையில் ஆக்ஸிஜன் ஆட்டோ’ – மக்களின் உயிர்காக்கும் தன்னார்வலர்! – Vikatan

சென்னைச் செய்திகள்

கொரோனா பெருந்தொற்று மக்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது. பலரும் நோய் தொற்று குறித்த அச்சத்துடன் உள்ளனர். அரசு தனது பங்கிற்கு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் பொது மக்கள் பலருமே இந்த இக்கட்டான சூழலில் தன்னார்வலர்களாக மாறி பல உதவிகளைச் செய்து வருகின்றனர்.

கொரோனா 2 வது அலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பெரும் சிக்கலை உண்டாக்கி வருகிறது. இதனால் பலரும் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் சிரமப்படுபவரை காக்க வசந்தகுமார் என்பவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் ஆக்ஸிஜன் ஆட்டோ ஒன்றை தயார் செய்துள்ளார். அதன் மூலமாக பலருக்கும் உதவி செய்துவருகிறார்.

அதன் மூலமாக பலருக்கும் உதவியும் செய்துவருகிறார். மருத்துவமனைக்கு தொற்றாளர்களை இந்த ஆட்டோ மூலம் அழைத்துச் செல்கிறார் . சென்னையில் வட சென்னை பகுதியில் 2 ஆக்ஸிஜன் ஆட்டோக்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டோ இருப்பது பெரும் பயனளிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் அந்தப் பகுதி மக்கள். பேரிடர் காலங்களில் இது போன்ற சமூக ஆர்வலர்களால் பல உயிர்கள் காக்கப்படுவது நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒன்று. அசாதாரண சூழல்களில் நம்பிக்கைதான் பலருக்கும் தேவைப்படக்கூடியதாக இருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/policies/vasantakumar-provides-an-oxygen-auto-service-in-chennai