ஐ.ஐ.டி மெட்ராஸ் நிறுவனத்துக்கும் ஜேர்மனியில் நடைபெற்ற பனிப்போருக்கும் என்ன தொடர்பு? – லங்காசிறி நியூஸ் – Lankasri

சென்னைச் செய்திகள்

ஐ.ஐ.டி மெட்ராஸ் நிறுவனத்துக்கும் ஜேர்மனியில் நடைபெற்ற பனிப்போருக்கும் என்ன
தொடர்பு?
சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று, மெட்ராஸ் நிறுவனத்துக்கும்
ஜேர்மனியில் நடைபெற்ற பனிப்போருக்கும் இடையிலான தொடர்பை தெரியப்படுத்தியுள்ளது.

1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜேர்மனி மற்றொரு குழப்பத்தை
எதிர்கொள்ளும் வாய்ப்பில் இருந்தது. அடுத்த ஒன்றரை தசாப்தத்தில், அரசியல்,
சமூக மற்றும் பொருளாதார காரணிகளால் பெர்லின் சுவர் உருவானது.

அந்த சுவர், ஜேர்மனியை கிழக்கு ஜெர்மனி என்றும் மேற்கு ஜெர்மனி என்றும்
இரண்டாகப் பிரித்தது.
இந்த இரண்டு ஜேர்மனிகளுக்கும் இடையிலான பனிப்போரின் போது இந்தியாவுக்கும்
ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகளிலிருந்து வெளிவந்த மிகப்பெரிய கல்வித்
திட்டங்களில் ஒன்று, 1959ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ்
நிறுவப்பட்டதாகும்.

1946 ஆம் ஆண்டில் சர்க்கார் கமிட்டி அமெரிக்காவின் புகழ்பெற்ற Massachusetts
Institute of Technology நிறுவன வரிசையில், குறைந்தபட்சம் நான்கு தொழில்நுட்ப
நிறுவனங்களை அமைக்க இந்தியாவுக்கு பரிந்துரைத்தது, ஆனால், சுதந்திரத்திற்கு
பின்புதான் ஐ.ஐ.டி. உருவானது.

மேற்கு ஜேர்மனி மெட்ராஸ் ஐ.ஐ.டிக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கு சற்று முன்பு,
சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஐ.ஐ.டி பம்பாய் 1958 இல் நிறுவப்பட்டது.
ஜவஹர்லால் நேரு பனிப்போரின் போது அணிசேரா இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றதால்
கிழக்கு ஜேர்மனியை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இந்தியா ஏற்றுக் கொள்ளக் கூடாது
என்று மேற்கு ஜேர்மனி விரும்பியது.

ஆரம்பத்தில் அதன் ஆசை நிறைவேறியது என்றும்
கூறலாம்.
மெட்ராஸ் ஐ.ஐ.டி அமைக்கப்படும் இடத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள்
இருப்பதாக கருதப்படுகிறது.
இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவரான ஜேர்மன் பேராசிரியரான Roland Wittje
என்பவர் கூறும்போது, முதலில் டில்லிக்கு அருகில் எங்காவதுதான் ஐ.ஐ.டி
அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது என்கிறார், அத்துடன், அதன் பின்னணியில்
அரசியல் காரணங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

image

ஆனால் பனிப்போருக்குப் பின்னர் இந்த நிறுவனம் மீது அரசியல் செல்வாக்கு ஏதும்
இல்லை என்று கூறுகிறார் Roland Wittje.
ஆரம்பத்தில், மேற்கு ஜேர்மனி நீண்ட கால கண்ணோட்டத்தில் சிந்திக்கவில்லை.
அவர்கள் மெட்ராஸ் ஐ.ஐ.டியை ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக மட்டுமே பார்த்தார்கள்.

ஆனால் 1970களின்போது, மேற்கு ஜேர்மனி ஒரு தொழில்நுட்ப அறிவியல் சர்வதேச
ஒத்துழைப்பை உருவாக்க விரும்பியது. ஆகவே, மற்ற ஐ.ஐ.டிகளிலிருந்து வேறுபட்ட ஒரு
திட்டத்துடன் மெட்ராஸ் ஐ.ஐ.டியை அது உருவாக்கியது என்கிறார் அவர்.

அன்று இந்தியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் இருந்த உறவின் பலனை இன்றும்
ஏராளம் மாணவர்கள் அனுபவிக்கிறார்கள் என்கிறார் Roland Wittje.  

image

Photo Credits – IIT M Heritage Centre

Source: https://news.lankasri.com/article/iit-madras-connection-with-cold-war-1620818576