சென்னையில் 153 செக்போஸ்ட்கள்.. வாகனங்களில் வெளியில் செல்ல போகிறீர்களா.. இதை படியுங்கள்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: இன்று முதல் சென்னைக்குள் பயணிக்க இ-பதிவு கட்டாயம் என்று மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. காலை 10மணிக்கு மேல் வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தடுக்க சென்னை முழுவதும் 153 வாகன சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் படி ஒரு சரகத்தில் இருந்து இன்னொரு காவல் சரகத்திற்குள் பயணிக்க இ பதிவு கட்டாயமாகும்.

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் (18.5,2021) முறையான ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சாலை தடுப்புகள் அமைப்பு

ஒவ்வொரு காவல் நிலைய சரகங்களில் உரிய சாலை தடுப்புகள் அமைத்து செக்டார்காள ஏற்படுத்தி அப்பகுதியிலேயே வசிக்கும் மக்கள் அவர்களுக்கு வேண்டிய காற்கறி, உணவுப்பொருட்கள், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை கண்காணிப்பு

பொதுமக்கள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் அறிவுரைப்படி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர். சென்னை பெருநசகரில் அனைது காவல் நிலைய சரகங்களையும் ஒருங்கிணைத்து முக்கிய சந்திப்புகள், சரக எல்லைகள் என 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

10மணிக்கு மேல் போக வேண்டாம்

அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை (காலை 6 மணி முதல் காலை10 மணி வரை) மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-விண்ணப்பம் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு இ- பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையில் கண்காணிப்பு

ஒவ்வொரு காவல் நிலைய எல்லைகளில் குறிப்பிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து உரிய சாலை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, செக்டார்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருமாநகரில் 348 செக்டார்கள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

அவசர மருத்துவம்

பொதுமக்கள் தங்கள் வசிக்கும் சரகத்திலிருந்து தேவையின்றி மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மறு காவல் நிலைய எல்லைக்கு செல்பவர்கள் உரிய இ-பதிவு செய்திருக்க வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்” இவ்வாறு சென்னை மாநகர காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

English summary
The chennai Metropolitan Police has announced that e-registration will be mandatory to travel within Chennai from today. It has announced that vehicles will be impounded if they drive outside outside after 10am.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-e-registration-e-registration-will-be-mandatory-to-travel-within-chennai-from-today-421206.html