திருந்தவே திருந்தாத சென்னை.. கூட்டம் கூட்டமாக சுற்றிய மக்கள்.. பிடித்து அதிரடி ஆக்சன் எடுத்த போலீஸ்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் இருக்கும் போதும் சென்னையில் வழக்கம் போல 10 மணிக்கு பின் பலர் வெளியே சுற்றி வருகிறார்கள். விதிகளை மதிக்காமல் இப்படி வெளியே சுற்றியவர்களை போலீசார் வழிமறித்து அபராதம் வசூலித்தனர்.

தமிழகத்தில் கொரோனா தீவிரம் அதிகரித்து வருவதால் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த லாக்டவுன் விதிகளை மக்கள் சரியாக மதிக்கவில்லை என்று கட்டுப்பாடுகள் உயர்த்தப்பட்டன. முக்கியமாக மக்கள் வெளியே செல்லும் நேரம் காலை 6-12 மணியில் இருந்து 6-10 ஆக குறைக்கப்பட்டது.

இப்படி இருந்தும் கூட சென்னையில் பல இடங்களில் மக்கள் 10 மணிக்கு பின் வெளியே செல்வது நடந்து வருகிறது. முக்கியமாக அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கிண்டி, வடபழனி, தி நகர் போன்ற இடங்களில் மக்கள் பலர் வெளியே சுற்றுவது வழக்கமாகி உள்ளது.

செம ஷாக்.. இந்தாண்டு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில்.. 93% கடைசி 3 மாதங்களில் ஏற்பட்டவைசெம ஷாக்.. இந்தாண்டு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில்.. 93% கடைசி 3 மாதங்களில் ஏற்பட்டவை

எச்சரிக்கை

இப்படி 10 மணிக்கு பின் வெளியே சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்த பின்பும் கூட பலர் மருத்துவமனை செல்ல வேண்டும், அத்தியாவசிய தேவை என்றெல்லாம் கூறி 10 மணிக்கு பின்பும் வெளியே கார், பைக்குகளில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதையடுத்து இவர்களுக்காக இ பதிவு குறைவு கொண்டு வரப்பட்டுள்ளது.

இ பதிவு

அதன்படி சென்னையில் 10 மணிக்கு பின் மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு வெளியே செல்ல வேண்டும் என்றால் இ பதிவு செய்ய வேண்டும். இ போர்ட்டல் தளத்தில் இ பதிவு செய்துவிட்டு, அதை காட்டி வெளியே செல்லலாம் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இன்று பலர் இந்த இ பதிவு கூட இல்லாமல் சென்னையில் கூட்டம் கூட்டமாக 10 மணிக்கு பின்பும் சுற்றினார்கள்.

சுற்றினார்கள்

முக்கியமாக சென்னையில் அண்ணாசாலையில் கார், பைக்குகளில் பலர் இப்படி வெளியே சென்றுள்ளனர். தி நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, ஆலந்தூரிலும் இப்படி பலர் வெளியே சுற்றி இருக்கிறார்கள். இப்படி வெளியே இ பதிவு இன்று சென்றவர்களிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள். சாலைகளில் பேரிகேட் போட்டு போலீசார் ஒவ்வொருவராக பிடித்து விசாரித்தனர்.

விசாரணை

இ பதிவு இல்லாமல் 10 மணிக்கு பின் வெளியே வந்தவர்களை மறித்து போலீசார் விசாரணை செய்தனர். சென்னையில் தேவையின்றி சுற்றுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை. இவர்கள் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

சென்னை மோசம்

சென்னையில் தற்போதுதான் தினசரி கேஸ்கள் லாக்டவுன் காரணமாக 7000ல் இருந்து 6500க்கும் கீழ் சென்றுள்ளது. கடந்த ஒரு வாரமாக கிராப் குறைந்துள்ளது. ஆனால் லாக்டவுன் விதிகளை மதிக்காமல் மக்கள் பலர் இப்படி சென்னையில் சுற்றுவது மீண்டும் கொரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Coronavirus Lockdown: Police takes action on people roaming around in Chennai after 10 AM.

Source: https://tamil.oneindia.com/news/chennai/police-takes-action-on-people-roaming-around-in-chennai-after-10-am-421219.html