சென்னை வந்த 83 ஆயிரம் டோய் கோவாக்சின்; தடுப்பூசி பணியில் தீவிரம் காட்டும் தமிழக அரசு! – Kalaignar Seithigal

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் ஒரளவு கட்டுக்குள் வந்துள்ளது.குறிப்பாக சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமளவு தொற்று குறைந்து வருகிறது. ஆனாலும் தமிழக அரசு மாநிலம் முழுவதிலும் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடுவதில் மாநில அரசு தீவிரம் காட்டிவருகிறது .அதோடு அரசுடன் இணைந்து தனியாா் மருத்துவமனைகள், தனியாா் தொழிற்சாலைகள் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன. அதற்கு தடுப்பூசிகள் அதிக அளவில் தேவைப்படுகிறது .

ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான அளவு தடுப்பூசிகளை ஒதுக்கவில்லை. எனவே மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

Source: https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/05/26/82-thousand-doses-of-covaxin-vaccines-came-to-chennai-from-hyderabad