சென்னை: அப்போலோ மருத்துவமனையில் ஜூன் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

ஜூன் முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

சென்னை

ஸ்பூட்னிக் வி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசி ஆகும். கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தற்போது நாட்டின் இரண்டாவது மிக விலையுயர்ந்த கொரோனா தடுப்பூசி ஆகும்.

ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து ஐதராபாத்தில் கடந்த 17 ஆம் தேதி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிசோதனை முறையாக செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், ஜூன் 2 ஆவது வாரம் முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அப்ப்போலோ குழும மருத்துவமனைகளின் நிர்வாக துணைத் தலைவர் ஷோபனா காமினேனி வெளியிட்டு உள்ள அறிக்கையில்  இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 2கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கப்படும்.”நாட்டின் 80 இடங்களில் 10 லட்சம் தடுப்பூசிகள் போட்டு உள்ளோம்  செப்டம்பர் மாதத்திற்குள் இரண்டு கோடி ஜதடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் உள்ளோம் என்று கூறி உள்ளார். 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/05/28104037/SputnikV-vaccine-from-June-at-Chennai-Apollo-Hospital.vpf