தொழில்நுட்ப இதழை ஆரம்பிக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ் – இதில் என்ன சிறப்பம்சம்! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) மெட்ராஸ் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் சாதனைகளை வெளிப்படுத்தும் தளமாக பணியாற்றுவதற்காக ‘ஐ.ஐ.டி மெட்ராஸ் சாஸ்த்ரா’ (IIT Madras Shaastra) என்ற தொழில்நுட்ப இதழைத் தொடங்கவுள்ளது. தொழில், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே தகவலறிந்த உரையாடல்களை இயக்குவதே பத்திரிகையின் குறிக்கோளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50,000 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களால் ஆதரிக்கப்படும் ஐ.ஐ.டி மெட்ராஸ் விஞ்ஞான முன்னேற்றங்களை ஒரு பரந்த சமூகத்திற்கு கொண்டு செல்ல ஒரு முன்முயற்சியை எடுத்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் பத்திரிகையின் அச்சு பதிப்பு (print edition) வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதன் வெப் வெர்சனை ஆன்லைனில் shaastramag.org என்ற தளத்தில் அணுகலாம்.

இது குறித்து என்று ஐ.ஐ.டி. நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, “விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து இந்திய தீர்வு சார்ந்த முன்னோக்கைக் கொண்டுவர ஒரு தொழில்முறை குழுவினரால் சாஸ்த்ரா உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த S&T பத்திரிகை வெளிவருவதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை விரிவாகக் கூறிய, ஐ.ஐ.டி மெட்ராஸ், பொறியியல் வடிவமைப்புத் துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீகாந்த் வேதாந்தம் மற்றும் ஆசிரியர் குழுவின் தலைவர் சாஸ்த்ரா ஆகியோர் கூறுகையில், “இது சிறந்ததைக் காண்பிப்பதற்கான ஒரு தளமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில், கல்வித்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு போன்ற தகவலறிந்த உரையாடல்களை இயக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ” என்று கூறியுள்ளனர்.

Also read… மருத்துவமனை முன் பிச்சை எடுத்த சிறுவன் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் – உடனடியாக உதவிய அமைச்சர்!

இது தொடர்பான முதல் இதழ் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிநவீன அறிவியல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோவிட் -19 வைரஸை டிகோட் செய்வதற்கான இந்திய விஞ்ஞானிகளின் முயற்சிகள் குறித்தும், அதேபோல் தொற்றுநோய்களுக்கு எதிராக எதிர்கால தடுப்பூசிகளை உருவாக்க அந்த அறிவைப் பயன்படுத்த எதுவாக அந்த இதழ் அமையும் என்று ஐ.ஐ.டி. மெட்ராஸ் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி பத்திரிகையின் வெளியீடு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “பல நிறுவனங்கள் பத்திரிகைகளை நடத்துகின்றன. அவற்றில் கல்விசார் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளன. ஆனால் இது ஒரு வித்தியாசமான முயற்சி. சாஸ்த்ரா ஒரு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்கான இதழ் ஆகும். இது இந்தியாவிலிருந்து விடுபட்ட ஒன்று மற்றும் முழு உலகமும் நமது கேன்வாஸ். இது இந்தியாவை மையமாகக் கொண்ட பார்வையை அனைவருக்கும் வழங்கும். ” என்று கூறியுள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Source: https://tamil.news18.com/news/education/iit-madras-to-launch-tech-magazine-vin-ghta-471641.html