சென்னை: ‘தொப்பைக்குள் ரூ.28 லட்சம் பணம்?! ஆந்திர இளைஞன் போலீஸிடம் சிக்கியது எப்படி?’ – Vikatan

சென்னைச் செய்திகள்

பின்னர் இளைஞரை சோதனை செய்தபோது அவரின் வயிற்றைச் சுற்றி துணி ஒன்றை பெல்ட் போல கட்டியிருந்தது தெரியவந்தது. அதில் மதுபாட்டில்கள் இருக்கும் எனக்கருதிய போலீஸார், அதை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. உடனடியாக இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிவநேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவநேசன், இளைஞரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் இளைஞரின் பெயர் சந்திரசேகர் (21), ஆந்திரமாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இவர், குண்டூரிலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் சென்னைக்கு வந்திருக்கிறார்.

இளைஞர் சந்திரசேகர்

அதற்கான ரயில் டிக்கெட்டையும் சந்திரசேகரிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் சந்திரசேகர் கொண்டு வந்த 2000 ரூபாய் நோட்டின் 7 கட்டுக்களிலிருந்த பணத்தை போலீஸார் எண்ணியபோது அதில் மொத்தம் 28 லட்சம் ரூபாய் இருந்தது. அதற்கான ஆவணங்களை சந்திரசேகரிடம் இன்ஸ்பெக்டர் சிவநேசன் கேட்டபோது எதுவும் இல்லை என அவர் கூறினார். மேலும் சந்திரசேகரிடம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜூவல்லரியின் விசிட்டிங் கார்டு இருந்திருக்கிறது. அதுகுறித்து விசாரித்தபோது அந்த நகைக்கடையில் வேலைப்பார்ப்பதாகக் கூறிய சந்திரசேகர், சென்னைக்கு சென்றால் குமார் என்பவரிடம் பணத்தைக் கொடுக்கும்படி கடையின் உரிமையாளர் கூறியதாக மட்டும் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். குமாரின் செல்போனை போலீஸார் தொடர்பு கொண்டபோது அது ‘ஸ்விட்ச் ஆப்’ என பதில் வந்திருக்கிறது. இதையடுத்து சந்திரசேகரையும் அவர் கொண்டு வந்த 28 லட்சம் ரூபாயையும் இன்ஸ்பெக்டர் சிவநேசன், வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்தப் பணம் எதற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டது என்று வருமானவரித்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கூறுகையில், “எங்களிடம் சிக்கிய சந்திரசேகர், சில தினங்களுக்கு முன் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்துச் சென்றிருக்கிறார். அப்போது அவர் பணம் கொண்டு வரவில்லை. லட்சக்கணக்கில் பணம் கொண்டு வருவதற்கு முன் நோட்டமிட ரயிலில் அவர் வந்துச் சென்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குமார் அல்லது நகைக்கடை உரிமையாளரிடம் விசாரித்ததால்தான் பணம் கொண்டு வரப்பட்டதற்கான காரணம் தெரியவரும். பிடிப்பட்ட சந்திரசேகர், பி.காம் படித்துக் கொண்டிருக்கிறார்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/andhra-youth-who-smuggled-rs-28-lakh-get-caught-by-the-chennai-railway-police