சென்னை வந்தடைந்த 4.2 லட்சம் தடுப்பூசிகள்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • மத்திய அரசு அனுப்பிவைத்த கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள்
  • சென்னைக்கு விமானம் மூலம் வந்த 4.2 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில், திடீரென தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.

இதையடுத்து, ஜூன் 3ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்படாது என தமிழக அரசு தெரிவித்தது. மேலும், இன்று மத்திய அரசிடம் இருந்து 4.2 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் சென்னைக்கு வரும் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

மே மாதத்துக்கு வரவேண்டிய தடுப்பூசி டோஸ்களே இன்னும் தமிழகத்துக்கு வரவில்லை எனவும், ஜூன் மாதத்துக்கு வர வேண்டிய தடுப்பூசிகள் எப்போது வரும் என தெரியாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜூன் மாதத்துக்கு 40.58 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பணக்காரர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசியா? மத்திய அமைச்சருக்கு திமுக கடிதம்!
இந்நிலையில், மத்திய அரசு அனுப்பிவைத்த 4,20,570 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலையில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன. இந்த தடுப்பூசிகள் மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்ட வாரியாக பிரித்தளிக்கப்படும்.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/over-4-lakh-covishield-vaccine-doses-arrived-at-chennai-today/articleshow/83147113.cms