சென்னை முழுவதும் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த மாநகராட்சி முடிவு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று கடந்த 10 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தில் இருந்து 19 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்களிடம் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக குருதி சார் அளவீடு ஆய்வு (Sero Survey) நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள அனைத்து பகுதி மக்களிடமும் சுழற்சி முறையில் பரிசோதனை செய்யப்பட உள்ளது. 

இதற்காக மாநகராட்சி சார்பில் பரிசோதனை குழுக்கள் அமைத்து வரும் வாரங்களில் பரிசோதனைகள் தொடங்கப்பட உள்ளன. இதன் முடிவுகளின்படி எந்தெந்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2021/06/09145707/Corporation-decides-to-conduct-Sero-survey-across.vpf