சென்னை: காரில் எம்.பி வாகன பாஸ்; போலீஸிடம் தப்பிக்க துணை கலெக்டர்! – யார் இந்த இளைஞர்? – Vikatan

சென்னைச் செய்திகள்

ஷியாம் சுந்தர், சுங்கச்சாவடியின் கட்டணத்தை செலுத்தாமல் தப்பிக்க எம்.பி-யின் வாகன பாஸை போலியாக தயாரித்து காரின் முன்பகுதியில் ஓட்டி வந்திருக்கிறார். மேலும் கொரோனா ஊரடங்கில் போலீஸாரின் வாகனச் சோதனையிலிருந்து தப்பிக்க துணை கலெக்டர் என்று கூறி வந்திருக்கிறார். அவரிடமிருந்து போலி எம்.பி வாகன பாஸ், சில அடையாள அட்டைகள், சொகுசு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

காரில் எம்.பி வாகன பாஸ் ஸ்டிக்கர்

இதையடுத்து ஷியாம் கண்ணா மீது 269, 170,171, 177,465,468 ஆகிய ஐபிசி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். விசாரணைக்குப்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். ஷியாம் கண்ணாவுக்கு யார் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தது என்று விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப்பிறகுதான் ஷியாம் கண்ணாவின் சுயரூபம் தெரியவரும். இதற்கிடையில் அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றுவதாகத் கூறியிருக்கிறார். அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.

ஒரே காரில் எமர்ஜென்ஸி ஆக்ஷன் நெட்வொர்க் கொடி, எம்.பி வாகன பாஸ் ஆகியவை இருந்ததோடு தன்னை துணைக் கலெக்டர் எனக்கூறியதால் ஷியாம் கண்ணா, போலீஸிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-a-young-man-who-created-fake-passes-to-escape-from-police-checking