சென்னையில் பரவலாக மழை – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை பரவலாக மழை பெய்து வருகின்றது.

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், பட்டாபிராம், ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை  பெய்து வருகின்றது.

Source: https://www.dinamani.com/latest-news/2021/jun/19/rain-in-chennai-3644668.html