சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு? – வெளியேறுவதாக உதவி பேராசிரியர் அறிவிப்பு – தந்தி டிவி

சென்னைச் செய்திகள்

சாதி ரீதியான பாகுபாட்டினை சுட்டிக்காட்டி உதவிப்பேராசிரியர் விபின் புதியதாத் என்பவர் , சென்னை ஐஐடியில் இருந்து வெளியேறுவதாக ஐஐடி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி யில் இஸ்லாமிய மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது சென்னை ஐ.ஐ.டியில்  ஜாதி, மத பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சமூகவியல் துறை உதவிப்பேராசியராக பணியாற்றி வந்த விபின், ஐஐடியில் சாதி பாகுபாடு இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். 

இது தொடர்பாக, அவர் அனுப்பிய மின்னஞ்சல் கடித த்தில், சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2021/07/01172522/2517963/Chennai-IIT-Professor-Issue.vpf.vpf