தலைநகரம் மக்கள் ரிலாக்ஸ்… கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமானது சென்னை..! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதன் எதிரொலியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமானது சென்னை.

கொரோனா 2-வது அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையும் ஒன்று. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் அதிகம் வசித்த பகுதிகளை கண்டெயின்மெண்ட் ஜோனாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என்றாலே அங்கு அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகள் எதுவும் பொருந்தாது. குறிப்பிட்ட அந்த தெருவே லாக்டவுனில் தான் காணப்படும். வெளி நபர்கள் யாரும் அந்த பகுதிக்குள் வர முடியாது. அதேபோல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களும் அங்கிருந்து வெளியே செல்ல முடியாது.

ஒரு தெருவில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் தான் அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். ஆனால் அண்மைகாலமாக கொரோனா பாதிப்பு மளமளவென சரிந்து வருவதால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

சென்னை சிக்னலில் விதிமீறல்: காட்டி கொடுத்த அதிநவீன கேமரா.. வசமாக சிக்கிய 10,905 பேருக்கு நோட்டீஸ்!சென்னை சிக்னலில் விதிமீறல்: காட்டி கொடுத்த அதிநவீன கேமரா.. வசமாக சிக்கிய 10,905 பேருக்கு நோட்டீஸ்!

கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பிறகு இப்போது தான் சென்னை மாநகர மக்கள் ஓரளவு ரிலாக்ஸ் அடைந்துள்ளனர். இதனிடையே சென்னையில் 15 மண்டலங்களிலும் சேர்த்தே மொத்தம் 2,446 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை இனி அதிகரிக்காமல் இருக்கவும், கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தொடர்ந்து நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

English summary
Chennai city is a without Containment zone

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-city-is-a-without-containment-zone-426061.html