சென்னை ஐஐடி-யில் சாதிய பாகுபாடா? என்ன நடக்கிறது உள்ளே – அதிரவைக்கும் தகவல்கள்! – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக கருதப்பகிறது ஐ.ஐ.டி. அந்த ஐ.ஐ.டி-களில், கடந்த சில ஆண்டுகளாக டாப் ரேங்கிங்கில் இருப்பது ஐஐடி மெட்ராஸ். அப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் சாதிய பாகுபாடு இருப்பதாக நீண்ட நாள்களாக சர்ச்சை தொடர்ந்து வருகிறது. தற்போது உதவி பேராசிரிய ஒருவரின் கடிதத்தால் அந்த சர்ச்சை மீண்டும் வெடித்திருக்கிறது.

ராஜினாமா கடிதம்

மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த விபின் என்ற அந்த உதவிப் பேராசிரியர், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிறார். அந்த கடிதம் சக ஐ.ஐ.டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, ”2019 மார்ச் மாதம், நான் இங்கு பணிக்குச் சேர்ந்ததிலிருந்து, பல நேரங்களில் சாதிய பாகுபாட்டை எதிர்க்கொண்டிருக்கிறேன். அதனால் ஐ.ஐ.டி-யில் இருந்து விலகும் முடிவை நான எடுத்திருக்கிறேன். எனக்கு மட்டுமல்ல இன்னும் சிலரும் பாகுபாட்டை சந்தித்திருக்கின்றனர். ஹுமானிட்டீஸ் துறையின் அதிகாரத்தில்ல் இருக்கும் சில தனி நபர்கள் என் மீது இந்த பாகுபாட்டைக் காட்டினர் . எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவு ஆசிரியர்களின் குறைகளைக் கேட்க தனி குழு அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. “ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் விபின்.

Source: https://www.vikatan.com/social-affairs/education/iit-madras-caste-discriminaton-suicides-whats-happening-inside