சிங்கார சென்னை 2.0.. திட்டங்களில் முழு வெளிப்படைத்தன்மை.. இனி ஒரே கிளிக்கில் ஆன்லைனில் பார்க்கலாம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்த அனைத்து விவரங்களையும் இனி ஒரே கிளிக்கில் இணையத்தில் பார்க்கும் வசதியை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது.

image

Singara Chennai 2.0 : ஒரே தளத்தில் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.. Chennai Corporation அசத்தல்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் சாலை போடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்ட பணிகள் நடந்து வருகின்றன. சென்னையின் பழைய பொலிவை மீட்டு கொண்டு வரும் வகையில் இந்த திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒரே உத்தரவு.. எல்லாமே மாறப்போகிறது.. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி அதிரடிஒரே உத்தரவு.. எல்லாமே மாறப்போகிறது.. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி அதிரடி

திட்ட பணிகள்

முக்கியமாக சென்னையில் புதிய சாலைகள் போடுவது, பாலங்கள் கட்டுவது, சுவரொட்டிகளை நீக்கி சுத்தம் செய்வது, புதிய பூங்காக்கள் அமைப்பது, கடலோர பூங்காக்கள் அமைப்பது, சென்னை பீச்களை சுற்றுலாத்தலமாக மாற்றும் புராஜக்ட் ப்ளூ என்ற திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறது. இதன் முதல் கட்டமாக சென்னையை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

எப்படி

இந்த நிலையில்தான் தற்போது சென்னையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் இணையத்தில் பதிவேற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சாலை திட்டங்கள் தொடங்கி பெரிய பெரிய மேம்பால திட்டங்கள் வரை அனைத்தையும் இணையத்தில் பதிவேற்றும் முடிவை அரசு எடுத்துள்ளது. மக்களிடம் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

வெளிப்படைத்தன்மை

அதன்படி ஒவ்வொரு மண்டல வாரியாகவும், வார்டு வாரியாகவும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து இணையத்தில் பார்க்க முடியும். சென்னை மாநகராட்சி இணைய பக்கத்தில் இந்த விவரங்கள் ஏற்றப்பட உள்ளது. வடபழனியில் மெட்ரோவிற்கு அருகில் சாலை பணிகள் நடந்தால் அது குறித்த விவரங்கள் கூட இதில் இடம்பெறும்.

முழு விபரம்

எவ்வளவு தூரம் சாலை போடப்படும், எவ்வளவு செலவு இதற்கு செய்யப்படும், எத்தனை நாட்களில் முடிக்கப்படும் என்ற அனைத்து விவரங்களும் இதில் இனி இடம்பெறும். மக்கள் எளிதாக தங்கள் பகுதியில் நடக்கும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள முடியும்.

எளிதாக தெரியும்

திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட அதுகுறித்து அப்டேட்டும் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களிடம் வெளிப்படையாக செயல்படும் வகையில் இந்த நடைமுறையை கொண்டு வர இருக்கிறோம். கண்டிப்பாக மக்கள் மத்தியில் இது வரவேற்பை பெறும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

English summary
Singara Chennai 2.0 Project: Greater Chennai Corporation to upload all the civic works online.

Source: https://tamil.oneindia.com/news/chennai/greater-chennai-corporation-to-upload-all-the-civic-works-online-426892.html