“சென்னை என்னை போடா வெண்ணெய்னு சொன்ன அந்த தருணம்…!’’ – குட்டி ஸ்டோரி – Vikatan

சென்னைச் செய்திகள்

சில வருடங்களுக்கு முன்னர், என் பிரெஞ்சு தோழி ஒருத்தியின் தந்தை பணி நிமித்தமாக சென்னையில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் விடுமுறைக்காக பிரான்சிலிருந்து இந்தியா வரவிருந்த நான், சென்னை சென்று அவளது தந்தையை சந்தித்துவருகிறேன் என்று கூறியது மட்டுமல்லாமல் உன் தந்தைக்கு ஏதாவது கொடுக்க விரும்பினாலும் கொண்டு செல்கிறேன் என்றும் திருவாய் மலர்ந்துவிட்டேன் ! அடுத்த நாளே ஒரு உயர் ரக ஒயின் பாட்டிலை என் கையில் கொடுத்துவிட்டாள் அவள்.

ங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்களை கிண்டல் செய்ய,

“புளித்த ஒயினும் நாறும் பாலாடை கட்டியும்”

என்றொரு சொற்றொடரை பயன்படுத்துவார்கள். நல்ல உணவுடன் ஒயினும், பின்னர் சீஸ் எனப்படும் பாலடை கட்டியும் பிரெஞ்சுகாரகளுக்கு மிக முக்கியம் ! அமெரிக்கா, ஐரோப்பா செல்லும் நம்மவர்களுக்கு அங்கு கிடைக்காத வற்றல், ஊறுகாய் வகைகளை போல பிரெஞ்சுக்காரர்களுக்கு நம் நாட்டில் கிடைக்காத ஒன்று தரமான ஒயின்.

ர் வந்தவுடன் அந்த ஒயின் பாட்டிலை பெட்டியிலிருந்து வெளியே எடுத்ததிலிருந்தே குடும்பத்தினர்களிடம்,

“தோழியின் தந்தைக்கு… தோழியின் தந்தைக்கு…”

என கூறி கூறியே என் வாய் புளிக்கத்தொடங்கிவிட்டது !

வந்து போகும் உறவினர்களும் தங்களுக்குள்,

“கவனித்தீர்களா ?!… கவனித்தோம் கவனித்தோம் !…”

என்ற ரீதியில் என்னையும் அந்த ஒயின் பாட்டிலையும் பார்த்து கிசுகிசுத்துக்கொள்ள, சென்னை செல்வதற்கான பயண திட்டத்தை போர்க்கால வேகத்தில் ஆரம்பித்தேன் !

Source: https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-chennai-2