சென்னை மாநகராட்சி: ஒரே வாரத்தில் 250 கோடி ரூபாய் டெண்டர்கள் ரத்து! காரணம் என்ன? – Vikatan

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது. ஆட்சி தொடங்கிய நாள் முதல் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பல அதிகாரிகளின் மாற்றம் மக்களிடையே பேசுபொருளானது. இந்தநிலையில், சென்னை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

மழைநீர் வடிகால்

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் சாலை, பூங்கா, மழைநீர் வடிகால், சுகாதாரம், கட்டடம், திடக்கழிவு மேலாண்மை, மின்துறை, நகரமைப்புப் பிரிவு என 17 துறைகள் செயல்பட்டுவருகின்றன. சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால், பூங்காக்கள் பராமரிப்பு போன்ற பல்வேறு பணிகளுக்கு அந்தந்தத் துறை அளவில் ஒப்பந்தங்கள் கோரப்படும். இந்தத் துறைகளில் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களில், முறையான திட்டமிடல் இல்லாதது, ஒப்பந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றப்படவில்லை போன்ற காரணங்களால் 250 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Source: https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-corporation-cancels-rs-250-crore-tenders-in-one-week-what-happened