இந்தியாவிலேயே ‘சென்னை’ தான் டாப்.. படுவேகமாக நடைபெறும் வேக்சின் பணி.. மாநகராட்சியின் சூப்பர் ஆக்ஷன் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: இந்தியாவிலேயே அதிகப்படியான மக்களுக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி நகரங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. அதேபோல 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிக பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதிலும் சென்னை தான் முதல் இடத்தில் இருக்கிறது.

நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது தான் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்துக் கட்டுக்குள் வந்துள்ளது.

கோயில் நிலத்தை மீட்க கோரிய வழக்கு.. அதிரடி ஆக்சனில் இறங்கிய ஹைகோர்ட்.. 5 துறைகளுக்கு நோட்டீஸ்கோயில் நிலத்தை மீட்க கோரிய வழக்கு.. அதிரடி ஆக்சனில் இறங்கிய ஹைகோர்ட்.. 5 துறைகளுக்கு நோட்டீஸ்

எனவே, கொரோனா 3ஆம் அலை ஏற்படுவதற்கு முன் வேகன்சின் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா வேக்சின்

இருப்பினும், வேக்சின் உற்பத்தி இன்னும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களிலும் வேக்சின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும்கூட அனைத்து மாநில அரசுகளும் வேக்சின் பணிகளை விரைவுபடுத்த பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சென்னை தான் டாப்

நாட்டிலேயே சென்னை நகரில் தனது மக்கள்தொகையில் தான் அதிகப்படியான மக்களுக்கு 2 டோஸ் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 11% மக்களுக்கு கொரோனா வேக்சின் இரண்டு டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து பெங்களூரில் 10% பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் 7% பேருக்கும் ஹைதராபாத்தில் 5% பேருக்கும் இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டோர்

அதேபோல 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிக பேருக்கு தடுப்பூசி செலுத்துவதிலும் சென்னை தான் டாப்-இல் உள்ளது. தலைநகர் சென்னையில் வசிக்கும் 45% வயதைக் கடந்தவர்களில் 85% வேக்சின் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல 45 வயதைக் கடந்தவர்களில் மும்பையில் 75% பேர், டெல்லியில் 59% பேர், ஹைதராபாத்தில் 48% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெங்களூரு

அதேநேரம் 18- 44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி போட்டதில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது. மெட்ரோ நகரங்களில் ஜனநெருக்கடி அதிகம் என்பதால் வைரஸ் பரவல் எளிதில் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால் முதலில் மெட்ரோ நகரங்களில் அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் செலுத்துவதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தாலாம்.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் டெல்டா கொரோனா வகை தான் 2ஆம் அலை சமயத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடலில் இருக்கும் தடுப்பாற்றல் என்பது டெல்டா கொரோனாவுக்கு எதிராக நல்ல பலன் அளிப்பதாக்கப் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வளவு விரைவாக முடிகிறதோ அவ்வளவு விரைவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே அவர்களின் பரிந்துரை. அதற்கேற்றவாறு சென்னையில் அதிகப்படியான மக்களுக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி..!

English summary
Chennai tops is the percentage of people vaccinated with 2 doses of Corona vaccine. 11% of the Chennai population recipes 2 doses of Corona vaccines.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-tops-in-percentage-of-population-vaccinated-427599.html