வேலை இழந்த என்யூஎல்எம் தொழிலாளர்களுக்கு முகாம்கள் நடத்தி வேலை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

Published : 25 Jul 2021 03:14 am

Updated : 25 Jul 2021 07:25 am

 

Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 07:25 AM

chennai-corporation

சென்னை

சென்னை மாநகராட்சியில் வேலைஇழந்த என்யூஎல்எம் தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், 12 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கு முன்பு, அந்த 12 மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (என்யூஎல்எம்) கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டு வந்தனர்.

பணி நீக்கம்

இப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதால், அங்கு பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, என்யூஎல்எம் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் மணலி மண்டலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாமில் பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வாகன உதவியாளர்கள் ஆகிய பணிகளுக்கு 214 தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்துஇதுபோன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய பணி வழங்கப்பட்டும் என்று மாநகராட்சி உறுதியளித்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/696976-chennai-corporation.html