வெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் மறுபடியும் அதிகமாகி விட்டது.. குறிப்பாக சென்னையில் இதன் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவது கலக்கத்தை தந்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்புவரை, தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது..

இந்த 5 மாவட்டங்களில் மட்டும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100-க்கும் மேற்பட்ட கேஸ்கள் கண்டறியப்பட்டன.. இதையடுத்து, பல்வேறு டெஸ்ட்கள், ஆய்வுகள் நடத்தப்பட்டு, மேற்கண்ட மாவட்டங்களில் ஓரளவு குறைய ஆரம்பித்தது..

அதிக தடுப்பூசி போட்ட நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவுவது ஏன்? அதிக தடுப்பூசி போட்ட நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவுவது ஏன்?

பாதிப்பு விகிதம்

ஆனால், சென்னையில் மட்டும் குறையாமல் உள்ளது.. குறிப்பாக, கடந்த புதன்கிழமை வரை படிப்படியாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது, கடந்த 4 நாட்களாகவே மறுபடியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.. அதாவது கொரோனா பாதிப்பு விகிதம் என்பது, கொரோனா டெஸ்ட்களில் உறுதியானவைகளை வைத்து, அந்த தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது..

சாத்திய கூறுகள்

இந்த டெஸ்ட்களின் எண்ணிக்கையில் அதிகரித்த போதிலும், பாதிப்பு விகிதம் குறையாமல் உள்ளது.. அதுமட்டுமல்ல, இனி வரும் நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை இன்னும் வேகமாகவே அதிகரிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதையும் இதுபோன்ற ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன.

கொரோனா பாதிப்பு

இப்போது ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்தால், தினமும் டெஸ்ட் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது சராசரியாக 1.42 லட்சமாக இருந்தது.. ஆனால், அது புதன்கிழமை படிப்படியாக 1.55 லட்சமாக அதிகரித்தது… புதன்கிழமை கொரோனா பாதிப்பு விகிதம் 1.1%-ல் இருந்து ஞாயிற்றுக்கிழமை 1.3% ஆக அதிகரித்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில், கொரோனா பாதிப்பானது, புதன்கிழமை 1,756-ல் ல் இருந்து ஞாயிற்றுக்கிழமை 1,990-ஆக அதிகரித்துள்ளது.

மண்டலங்கள்

சென்னையில் கோடம்பாக்க மண்டலத்தில் அதிக அளவாக 51,965 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்… மணலியில் குறைந்த அளவாக 7,937 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்… அதேபோல, உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அண்ணாநகர் மண்டலம் அதிக அளவாக (962 பேர்) உள்ளது.. இதற்கடுத்து, தேனாம்பேட்டை (954), கோடம்பாக்கம் (933) மண்டலங்கள் உள்ளன… குறைந்த அளவாக மணலியில் 77 பேர் பலியாகி உள்ளனர்.

வைரஸ்

சென்னையில் கடந்த 27ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 109ஆகக் குறைந்திருந்த நிலையில், தற்போது வைரஸ் பாதிப்பு 204ஆக அதிகரித்துள்ளது.. இதையடுத்து வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் நேற்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது..

கடைகள்

ரங்கநாதன் தெரு வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரையிலான பகுதிகள், புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை பகுதிகள், ராயபுரம் மார்க்கெட், அமைந்தகரை மார்க்கெட் பகுதிகள், கொத்தவால்சாவடி மார்க்கெட், ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதிகள் உட்பட 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன..

மார்க்கெட்

இதையடுத்து, நேற்றும் இன்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வெறிச்சோடி உள்ளன.. மார்க்கெட் பகுதிகளும் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.. இது ஓரளவு பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… மேலும் டெஸ்ட்களும் இந்த சமயத்தில் அதிகரித்து வருவதால், கூடுதல் பலன் கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது.

English summary
Corona restrictions in Chennai and Covid test Positivity rate increase

Source: https://tamil.oneindia.com/news/chennai/corona-restrictions-in-chennai-and-covid-test-positivity-rate-increase-428888.html